Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..

Nainar Nagendran: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ 2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும், திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை, பாஜக - அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது” என பேசியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Oct 2025 06:40 AM IST

மதுரை, அக்டோபர் 13, 2025: 2026 சட்டமன்ற தேர்தலையோட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார், சுற்றுப்பயணத்தின் தொடக்க விழா மதுரையில் அண்ணாநகரில் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” தொடக்க விழாவில் மத்திய இணைச் அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள், நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணத்திற்க்கான பாடலை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

பிரச்சார பயணத்திற்க்கான குறும்படத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். பிரச்சாரப் பயணத்திற்க்கான வீடியோ பாடலில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசிய பேச்சுக்களின் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் நோக்கம்:


பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் “திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது, திமுக ஆட்சி நடத்தவில்லை வெறும் காட்சிகளாக உள்ளது, எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு முன்னுரை எழுதி உள்ளார், பாஜக திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும், ஆட்சியா நடத்துகிறார்கள், திமுக ஆட்சிக்கு முடிவு எழுத 177 நாட்கள் உள்ளது, ஒவ்வொரு நாளும் திமுகவுக்கு முடிவுகள் எழுதப்பட்டு வருகின்றது, விடியாத திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனபது தான் பிரச்சாரத்தின் நோக்கம்.

மேலும் படிக்க: இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது.. கெடு வைத்த நயினார் நாகேந்திரன்!

அதிமுக – பாஜக கூட்டணி – இயற்கையான கூட்டணி:

2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும், திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை, திமுக கூட்டணியில் உள்ள கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் குறைக்க உள்ளதாக தகவல், பாஜக – அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது. திமுகவினர் நன்றி மறந்தவர்கள், முரசொலி மாறன் இறப்புக்கு நேரில் அஞ்சலி செலுத்திய வாஜ்பாயை அவதூறாக பேசினார்கள. கச்சத்தீவு ஏன் தாரை வார்க்கப்பட்டது என திமுகவினர் கூறவில்லை.

மேலும் படிக்க: எனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் – ஈபிஎஸ்!

கரூர் சம்பவத்திற்கு அரசு தான் காரணம்:

எடப்பாடி பழனிச்சாமி அதிக அளவில் மத்திய அரசு நிதிகளை பெற்று தந்துள்ளார், அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர், கரூரில் நடந்த நிகழ்வு இனி எந்த காலத்திலும் நடக்க கூடாது, கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்துக்கு காவல்துறையும், தமிழக அரசும் தான் காரணம், கள்ளச்சாராயம் சாவுக்கு 10 இலட்சம் கொடுக்கும் வினோதமான கட்சி திமுக, கரூர் ரவுண்டானாவில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுத்து இருந்தால் துயர நிகழ்வு நடந்திருக்காது” என பேசினார்.