இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது.. கெடு வைத்த நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran About 2026 Election | இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை, அக்டோபர் 12 : இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். நயினார் நாகேந்திரன் இன்று (அக்டோபர் 12, 2025) முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன்
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று (அக்டோபர் 12, 2025) பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். தூய்மை பணியாளர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியதற்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றமே கேள்வி கேட்கும் ஒரே ஆட்சியாக தான் திமுக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Kalaimamani Awards: தமிழக அரசின் கலைமாமணி விருது… முதலமைச்சரிடம் விருதை பெற்ற திரைப்பிரபலங்கள்!
கரூர் விவகாரம் அரசு மற்றும் போலீசாரின் குற்றம் – நயினார் நாகேந்திரன்
கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அது எப்படி நடந்தது அரசு மற்றும் போலீசாரின் குற்றம். காவல்துறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் வைத்திருக்கிறார். ஆனால், தினம் தினம் படுகொலை. சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெரிய விநோதம். சாராயம் குடித்து இறந்துப்போனால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Sellur Raju: எங்கள் கட்சி கொடியவே அதிமுக காரங்க தூக்க மாட்டாங்க.. ஜாலியாக பேசிய செல்லூர் ராஜூ!
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது. இன்று முதல் நாட்கள் குறிக்கப்படுகிறது. திமுக அரசின் ஆட்சி காலத்தின் நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.