மாலை 3 மணிக்கு மேல் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. காரணம் என்ன?
Indian Share Market Crashed Today | இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று மாலை 3 மணிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளது.
மும்பை, மே 29 : இன்று (மே 29, 2026) இந்திய பங்குச்சந்தை (Indian Share Market) கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் (America – Israel) இடையே நீடித்து வரும் நிலையற்ற தன்மை காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது இன்று சென்செக்ஸ் சுமார் 1,092.06 புள்ளிகளும், நிஃப்டி 359.40 புள்ளிகளும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
இன்று மாலை 3 மணிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் (BSE Sensex) 1,092.0 புள்ளிகள் அதாவது 1.44 சதவீதம் சரிவை சந்தித்து 74,775.74 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இதேபோல என்எஸ்இ நிஃப்டி (NSE Nifty) 359.40 புள்ளிகள் சரிவை சந்தித்து அதாவது 1.50 சதவீதம் சரிவை சந்தித்து 23,547.75 புள்ளிகளுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : நிதி பாதுகாப்பு வேண்டுமா?.. அப்போது இந்த மினிமலிச கொள்கைகளை பின்பற்றுங்கள்!




தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம், பருவமழை நீண்ட கால சராசரியில் 90 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதன் காரணமாக விவசாய மற்றும் உணவு பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் காரணமாகம் சந்தை மனநிலை பலவீனம் அடைந்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தை இந்த மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உங்களுக்கே தெரியாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?.. இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!
இதுதவிர ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசியா போர் தொடர்பான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் அசாத்தியமான சூழல் நிலவுகிறது. இதுவும் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்திக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் போர்
மேற்கு ஆசியா போர் தொடங்கியது முதலே இந்திய பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.