மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?..
Gold Price rise: சந்தைப் வல்லுநர்களின் கூற்றுப்படி, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழல் போன்ற காரணங்களால் உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
Gold Price Today: சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்றைய தினம் (மே 29, 2026) மீண்டும் கணிசமாக உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைக் காலத் தேவைகள் காரணமாக நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் வேளையில், இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நாட்கள் விலை உயர்வதும், பின்னர் அடுத்த சில நாட்களிலேயே விலை சரிவதுமான ஒரு நிலையற்ற போக்கிலேயே ஆபரணத் தங்கத்தின் சந்தை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க: பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 5 அப்டேட்டுகளை செய்ய வேண்டியு கட்டாயம்!
தங்கம் விலை நிலவரம்:
அவ்வாறு, நேற்றைய தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு ₹14,600க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ₹1,16,800க்கும் விற்கப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக நீடித்த அதிரடி சரிவு:
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த மே 26-ஆம் தேதி முதல் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இதன் தொடர்ச்சியாக 3வது நாளாக நேற்று முன்தின விலையை விட நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிவைச் சந்தித்தது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹14,650க்கும், ஒரு சவரன் ₹1,17,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ₹150-ம், சவரனுக்கு ₹1,200-ம் ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் ₹14,500-க்கும், ஒரு சவரன் ₹1,16,000-க்கும் விற்கப்பட்டது. இந்தத் தொடர் வீழ்ச்சியால், கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ₹280-ம், சவரனுக்கு ₹2,240-ம் சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்:
சந்தைப் வல்லுநர்களின் கூற்றுப்படி, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழல் போன்ற காரணங்களால் உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் நேரடி எதிரொலியாகவே உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது குற்றம்?.. விதிகள் கூறுவது என்ன?