AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமான விபத்து – கட்டணத்தை குறைத்த ஏர் இந்தியா – காரணம் என்ன?

Air India Update: குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஏற்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை கணிசமாக குறைத்துள்ளது. இருப்பினும் மக்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

விமான விபத்து – கட்டணத்தை குறைத்த ஏர் இந்தியா – காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jun 2025 15:11 PM IST

இந்தியாவின் (India) முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா (Air India) சமீபத்தில் அதன் முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட்டுகளுக்கான விலையை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளது. டிக்கெட் விலைகள் மிகவும் குறைந்து விட்ட நிலையில், தற்போது உள்ளூர் விமானங்களின் டிக்கெட்டுகளை விட விலை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும், ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க, பயணிகள் முன்பதிவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிக்கெட் விலை குறைந்திருக்கும் வழித்தடங்கள்

டெல்லி – மும்பை, டெல்லி – பெங்களூரு, டெல்லி – துபாய் மற்றும் மும்பை – துபாய் போன்ற முக்கிய வழித்தடங்களில் ஏர் இந்தியா விமானக் கட்டணங்கள் வெகுவாககுறைத்துள்ளது. குறிப்பாக, டெல்லி – மும்பை வழித்தடத்தில் ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகள் தற்போது ரூ.5,000க்கும் குறைந்துள்ளது. முன்பு இந்த வழித்தடங்களில் விடுமுறை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களைப் பொறுத்து ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை இருந்தது. இதேபோல், டெல்லி – துபாய் போன்ற சர்வதேச வழித்தடங்களில், விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் குறைந்துள்ளன.

குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்த ஏர் இந்தியா

 

ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது மக்கள் ஆர்வம் குறைந்ததற்கு காரணம்?

கட்டணங்கள் குறையத் தொடங்கிய போதும், முன்பதிவுகளின் வேகம் எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக உள்ளது. சில ஏர் இந்தியா விமானங்கள் 60% க்கும் குறைவான பயணிகளுடனயே செல்வதாக கூறப்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து என்று கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 267க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

விமானங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள், முறையான பராமரிப்பு இல்லாமை மற்றும் சமீபத்திய விபத்து ஆகியவை அந்த விமானத்தின் மீது மக்களின் நம்பிக்கையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் பயணிகள் ஏர் இந்தியா விமானங்கள் மீது மக்கள் ஆர்வம் குறைந்திருக்கிறது.  இதன் ஒரு பகுதியாக, விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை என்று நிறுவனம் மறுத்துள்ளது.

ஏர் இந்தியாவின் நோக்கம் என்ன?

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா இப்போது கணிசமாக டிக்கெட் விலை குறைவை ஏற்படுத்தியிருக்கிறது. இழந்த மார்க்கெட் ஷேரை மீண்டும் பெறுவதும், பயணிகளிடையே நம்பிக்கையை மீண்டும் பெறுவதும் இதன் நோக்கமாகும். மேலும் குறைந்த கட்டணங்கள் மூலம் விமானப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதையும்,  ஏர் இந்தியா பிராண்டை மீண்டும் நிலைநிறுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us