AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

How To Apply For Passport: பாஸ்போர்ட் எளிதில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?

How To Apply For Passport: இந்தியாவில் ஒருவர் படிப்பு சார்ந்து, வேலை சார்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் மிகவும் அவசியம். தற்போது பாஸ்போர்ட் சேவா போர்டல் பாஸ்போர்ட் பெறுவது எளிமையாகியிருக்கிறது.இந்த நிலையில் பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

How To Apply For Passport: பாஸ்போர்ட் எளிதில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Jun 2025 17:04 PM IST

இந்தியாவை விட்டு சுற்றுப் பயணமாகவோ, படிப்பிற்காகவோ, வேலை போன்ற காரணங்களுக்காகவோ வெளி நாடுகளுக்கு  செல்ல ஒரு இந்திய குடிமகனாக நமக்கு பாஸ்போர்ட் (Passport )மிகவும் அவசியம். பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். ஒருவரது பெயர் தொடங்கி புகைப்படம், குற்றப் பின்னணி கொண்டவரா என்பது வரை அனைத்து தகவல்களும் பாஸ்போர்ட்டில் இடம்பெறும். வெளிநாடுகளில் இதனை வைத்திருப்பது உங்களை ஒரு நம்பிக்கைக்குரிய நபராக காட்டும். பாஸ்போர்ட் என்பது தற்போது அத்தியாவசியமாகி விட்டது. வேலை சார்ந்து யாருக்கு எப்பொழுது வாய்ப்பு வரும் என சொல்ல முடியாது. எனவே பாஸ்போர்ட்டை முன் கூட்டியே எடுத்து வைத்திருப்பது அவசியம். தற்போது பாஸ்போர்ட் சேவா போர்டல்  (Passport Seva Portal) பாஸ்போர்ட் பெறுவது எளிமையாகியிருக்கிறது.

ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை

 பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்கள்

முகவரி ஆதாரம் (இதில் ஏதேனும் ஒன்று):

  • ஆதார் கார்டு

  • வாக்காளர் அடையாள அட்டை.

  • வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்

  • மின்சாரம்/தண்ணீர்/தொலைபேசி பில்

  • வீட்டு வாடகை ஒப்பந்தம்

பிறந்த தேதி ஆதாரம் (இதில் ஏதேனும் ஒன்று)

  • பிறப்பு சான்றிதழ்

  • பள்ளி டிசி

  • ஆதார் கார்ட்

  • பான் கார்டு

அடையாள ஆவணம்

  • பான் கார்டு

  • ஆதார் கார்டு

  • வோட்டர் ஐடி

Follow Us