AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PAN : பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்.. விரிவாக பார்க்கலாம்!

PAN Card | இந்தியாவில் 18 வயது நிரம்பிய, வங்கி கணக்கு பயன்படுத்தும் நபர்கள் அனைவருக்கும் பான் கார்டு கட்டாயமாக உள்ளது. பான் எண் நிரந்தர கணக்கு எண்ணாக உள்ள நிலையில், ஒருவர் எந்த வித பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும் அது, இந்த பான் கார்டில் வரவு வைக்கப்படும்.

PAN : பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்.. விரிவாக பார்க்கலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 May 2025 23:09 PM IST

இந்தியாவில் வங்கி சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பான் (PAN – Permanent Account Number) கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. கல்லூரி மாணவர்கள் முதல் ஊதியம் வாங்கும் நபர்கள், தொழில் செய்யும் நபர்கள் என அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. பான் கார்டு இவ்வளவு முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில், பலருக்கு அதன் முக்கியத்துவம் குறித்து தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், பான் கார்டு என்றால் என்ன, அதில் என்ன என்ன பலன்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பான் கார்டு என்றால் என்ன?

நிரந்தர கணக்கு எண் தான் பான் கார்டு என அழைக்கப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமாக உள்ளது. வங்கி கடன் பெறுவது, வருமான வரி செலுத்துவது ஆகியவற்றுக்காக தான் பான் கார்டு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டில் 10 இலக்க எண்கள் இடம்பெற்றிருக்கும். இந்த எண், ABCDE1234F என்ற வடிவில் இருக்கும். இந்த எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கு ஒரு தனிப்பட்ட விளக்கம் உள்ளது. அதாவது, பான் எண்ணில் முதலில் உள்ள மூன்று எழுத்துக்கள் பொதுவாக இருக்கும். அதில் நான்காவதாக உள்ள எழுத்து பான் கார்டு வைத்திருக்கும் நபரின் வகையை குறிக்கும். உதாரணமாக தனிநபர், நிறுவனம் உள்ளிட்டவற்றை இந்த நான்காவது எழுத்து குறிக்கும்.

பான் கார்டு எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

பான் கார்டு மூலம் ஒருவரின் அனைத்து விதமான பண பரிவர்த்தனை நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகிறது. அதாவது, ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருந்தாலும், அத்தனை கணக்குகளும் இந்த பான் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமன்றி, அந்த வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள் இந்த நிறந்தர கணக்கு எண்ணில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை மேற்கொள்கிறார், யாருக்கு பணம் அனுப்புகிறார் என்பதெல்லாம் பதிவு செய்யப்படும்.

வருமான வரி உள்ளிட்ட முக்கிய அம்சங்களுக்கு இந்த பான் கார்டு மிக முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us