AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Indian Railway : டிக்கெட் விலை உயர்வு முதல்.. ஆதார் OTP வரை.. இந்திய ரயில்வேயில் அமலுக்கு வர உள்ள 3 முக்கிய மாற்றங்கள்!

Three Main Changes in Indian Railway | இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை நம்பியுள்ளனர். இந்த நிலையில், இந்திய ரயில்வே மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவை அனைத்தும் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Indian Railway : டிக்கெட் விலை உயர்வு முதல்.. ஆதார் OTP வரை.. இந்திய ரயில்வேயில் அமலுக்கு வர உள்ள 3 முக்கிய மாற்றங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Jun 2025 12:08 PM IST

ஜூலை 1, 2025 முதல் இந்திய ரயில்வேயில் மூன்று முக்கிய மாற்றங்கள் (Three Important Changes in Indian Railway) ஏற்பட உள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஏராளமான பொதுமக்கள் ரயில் பயணத்தை நம்பியுள்ள நிலையில், இந்த மூன்று மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ள டிக்கெட் விலை உயர்வு (Ticket Price Increase), தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் (Changes in Tatkal Ticket Booking) மற்றும் ஆதார் ஓடிபி அங்கீகாரம் (Aadhaar OTP Verification) ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களின் பிரதான போக்குவரத்து தேவையாக உள்ள ரயில்கள்

இந்தியாவை பொருத்தவரை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான போக்குவரத்து சேவையாக ரயில்கள் உள்ளன. குறைந்த விலையில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு, பயணம் ஆகியவற்றில் மூன்று முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளது. இந்த மூன்று மாற்றங்களும் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.

ரயில் டிக்கெட் விலை உயர்வு

இந்திய ரயில்வே ஏசி அல்லாத அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களில் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 1 ரூபாய் விகிதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல ஏசி வகுப்பிற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏசி வகுப்பில் பயணம் செய்ய ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்

தட்கல் டிக்கெட் முன்பதிவில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதேபோல முன்பதிவு கோச்சில் முதல் 30 நிமிடங்களில் முகவர்களின் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாது.

காரணம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நேரத்தின்படி ஏசி வகுப்பு களுக்கான நேரம் காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரையும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணி முதல் காலை 11.30 மணி வரையும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ஆதார் ஒடிபி அங்கீகாரம் கட்டாயம்

இனிவரும் காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் அடிப்படையில் ஓடிபி அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us