AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி மொபைல் மூலமே வாக்களிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விவரம்!

Bihar E Voting System : நாட்டிலையே முதல்முறையாக பீகார் மாநிலத்தில் மொபைல் மூலம் வாக்களிக்க நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று நகர்ப்புற தேர்தலில் மக்கள் மொபைல் செயலி மூலம் வாக்களித்துள்ளனர். எனவே, இந்த செயலி எப்படி செயல்படுகிற? எப்படி வாக்களிப்பது போன்ற விவரங்களை பார்ப்போம்.

இனி மொபைல் மூலமே வாக்களிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விவரம்!
மொபைல் செயலி மூலம் வாக்களிக்கலாம்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jun 2025 12:17 PM IST

பீகார், ஜூன் 28 : நாட்டிலையே முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட் போன் மூலம் வாக்களிக்கும் (Bihar E Voting System) முறையை பீகார் தேர்தல் ஆணையம்  (Bihar Election Commission) அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக செயலி ஒன்றையும் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் எளிதாக செல்போனில் வாக்களிக்க முடியும். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் மக்கள் வாக்களிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.  காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மொபைல்  செயலி மூலம் வாக்களித்த மக்கள்

மேலும்,  நேரடியாக வாக்களிக்க முடியாதவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும். இப்படியாக  வாக்களிக்கு நடைபெறும் இருக்கும் நிலையில், பீகார் மாநிலத்தில் ஸ்மார்ட் போன் மூலம் வாக்களிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று பீகாரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பாட்னா, ரோஹ்தாஸ் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் வாக்களித்துள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம், வாக்காளர்கள் வீட்டில் அமர்ந்து, மொபைல் செயலி மூலம் வாக்களித்துள்ளனர்.

2025 ஜூன் 27ஆம் தேதி வரை சுமார் 10,000 பேர் மொபைலில் வாக்களிக்க பதிவு செய்துள்ளார். வரும் காலங்களில் வரும் தேர்தல்களில் 50,000 வாக்காளர்கள் வரை இந்த முறையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மொபைல் செயலி வாக்களிக்கும் நடைமுறை முதல்முறையாக பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பீகாரில் அறிமுகம்

எப்படி செயல்படுகிறது?

மொபைல் முலம் வாக்களிக்க விரும்புபவர்கள் E voting SECBHR என்ற செயலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலி மூலம் வாக்களிக்க வாக்காளர்கள் தங்களது மொபைல் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவை கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும். லைவ் ஃபேஸ் ஸ்கேன் மூலம் வாக்களிர்களின் ஆதாரம் சரிபார்க்கப்படுகிறது. இதன்பின், Vote என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தங்களது வாக்கை செலுத்தலாம். யாருக்கு வாக்களிப்பது போன்றவையும் அறிந்து கொள்ள முடியும்.

வாக்கு செலுத்திய பிறகு, வாக்காளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். இந்த மொபைல் செயலியில் இருந்து இரண்டு பேர் வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடிக்கு வர முடியாத கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் இந்த செயலி மூலம் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us