AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐபிஎல் ரசிகர்களைக் குறிவைக்கும் புதிய சைபர் மோசடி – கோடி கணக்கில் இழந்த ரசிகர்கள்

ஏஐ டீப்‌ஃபேக் வீடியோக்கள், போலி பெட்டிங் செயலிகள், டெலிகிராம் சேனல்கள், போலியான லோன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்ப மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெறுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் கிளௌட்எஸ்இகே (CloudSEK) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் ரசிகர்களைக் குறிவைக்கும் புதிய சைபர் மோசடி – கோடி கணக்கில் இழந்த ரசிகர்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 May 2026 22:29 PM IST

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். ஏஐ டீப்‌ஃபேக் வீடியோக்கள், போலி பெட்டிங் செயலிகள், டெலிகிராம் சேனல்கள், போலியான லோன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்ப மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெறுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் கிளௌட்எஸ்இகே (CloudSEK) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

1,200க்கும் மேற்பட்ட சட்டவிரோத பெட்டிங் தளங்கள்

இது தொடர்பாக CloudSEK வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஐபிஎல் 2026 சீசனில் மட்டும் 1,200-க்கும் அதிகமான சட்டவிரோத பெட்டிங் இணையதளங்ககள் செயல்பட்டுள்ளன. இவை அனைத்தும் உண்மையான கேமிங் இணையதளங்கள் போலவே நேர்த்தியான வடிவமைப்பு, நேரடி போட்டி தகவல்கள், வாடிக்கையாளர் ஆதரவு, போனஸ் போன்ற வசதிகளுடன் கிடைக்கின்றன.

இதையும் படிக்க : குழந்தை பிறப்பு விகிதம் சரிவை சந்திக்க முக்கிய காரணியாக உள்ள ஸ்மார்ட்போன்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

இந்த இணையதளங்கள் பலவும் டெலிகிராம் சேனல்கள் சில மறைமுக குழக்களால் விற்கப்படும் கிளௌன் ஸ்கிரிப்ட்ஸ் மூலம் சில நிமிடங்களிலேயே உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு இணையதளத்தை பிளாக் செய்யப்பட்டாலும் உடனடியாக புதிய டொமைன் மூலம் மீண்டும் தொடங்கப்படுகிறது. இந்த இணையதளங்களில் ஆரம்பத்தில் சிறிய தொகைகள் வெல்ல முடியும். இதனால் பயனர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அதிக அளவில் முதலீடு செய்ய தூண்டப்படுகின்றனர்.

பெரிய தொகைளை நாம் வென்றதாக காட்டப்படும். ஆனால் நம்மால் அந்த பணத்தை கோரிக்கை நிறுத்தப்படும். மேலும் கணக்குகளில் தவறு உள்ளிட்ட காரணங்கள் கூறி நம் பணம் பெறுதல் நிறுத்தப்படும். பணம் எடுக்கும் கோரிக்கை நீண்ட நேரம் நிலுவையில் வைக்கப்படும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் காரணம் காட்டி மறுக்கப்படும். கணக்கு சரிபார்ப்பு என்ற பெயரில் தாமதப்படுத்தப்படும்.

இதையும் படிக்க : பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் – தடுக்க உதவும் யூடியூபின் ஏஐ தொழில்நுட்பம்

இது தொடர்பாக CloudSEK ஆய்வாளர்கள் ஒரு பெட்டிங் பிளாட்ஃபார்மின் அட்மின் பேனலை அணுகிய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நிறுவனத்தின் மூலம் 25க்கும் மேற்பட்ட பெட்டிங் இணையதளங்கள் செயல்பட்டது தெரியவந்தது. குறிப்பாக மே 2025 முதல் மே 2026 ஒரு வருட காலத்தில் 9,300க்கும் மேற்பட்ட பணம் எடுக்கும் கோரிக்கை திட்டமிட்டு தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மொ்த மதிப்பு ரூ.4.65 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக உருவாகவில்லை. அட்மின் தரப்பில் பணம் எடுக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த ஐபிஎல் சீசனில் ஏஐ டீப் ஃபேக் வீடியோ அதிக கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. மோசடி நபர்கள் பிரபல யூடியூபர்ஸ் , கிரிக்கெட் வீரர்கள், இன்ஃப்ளூயன்சர்களின் குரல் போலவும், போலியான வடியோக்கல் மூலம் இது போன்ற பெட்டிங் செயலிகளை மக்களிடையே பிரபலப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

Follow Us