AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் தேர்வை பாதுகாப்பாக நடத்த ஆய்வு கூட்டம் – போலி டெலிகிராம் சேனல்களை நீக்க உத்தரவு

நீட் மறுதேர்வை பாதுகாப்பாக நடத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கல்வி அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வை பாதுகாப்பாக நடத்த ஆய்வு கூட்டம் – போலி டெலிகிராம் சேனல்களை நீக்க உத்தரவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் ஆய்வு கூட்டம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 May 2026 17:00 PM IST

நீட் மறுதேர்வை பாதுகாப்பாக நடத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கல்வி அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் மறுதேர்வு எந்தவித முறைகேடும் இல்லாமல் பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு முன்பே சாத்தியமான குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு சவால்களை கண்டறிந்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மெட்டா, கூகுள் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுடனும் தனி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை சுற்றி பரவி வரும் போலி தகவல்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக டெலிகிராம் சனல்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஆன்லைன் குழுக்கள் மூலம் போலியான வினாத்தாள் வெளியானதாக தகவல்கள் பரப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் மத்தியில் பதற்றம்

தேர்வுக்கு முன்பாக பல டெலிகிராம் சேனல்கள் திடீரென உருவாக்கப்பட்டு, போலி வினாத்தாள் வெளியானதாக தகவல்கள் , கிளிக் பைட் செய்திகள், உறுதி செய்யப்படாத தகவல்கள் போன்றவற்றை பரப்பி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. மேலும், பல லிங்குகள் போலி குழுக்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

உளவுத்துறை அமைப்புகள் வழங்கிய தகவலின்படி, பல சந்தேகத்திற்கிடமான டெலிகிராம் சேனல்கள் ஒரே சில தொலைபேசி எண்களை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் ஒருங்கிணைந்த முறையில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தர்மேந்திர பிரதான் கடும் உத்தரவு

இந்த விவகாரத்தை மிகவும் முக்கியமாக எடுத்துக்கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், போலி தகவல் பரப்பும் சேனல்களை உடனடியாக கண்டறிந்து, அவற்றை பிளாக் செய்ய வேண்டும் எனவும் தேவைப்படும்பட்சத்தில் அதனை நீக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Follow Us