நடுங்கிய சேலம்.. தந்தை, சித்தியை கொன்ற மகன்.. துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!
Salem Murder : சேலம் மாவட்டத்தில் தந்தை மற்றும் சித்தியை கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தங்கையிடம் தந்தை தகாத முறையில் நடந்து கொண்ட ஆத்திரத்தில், இரண்டு பேரையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம், ஆகஸ்ட் 22 : சேலம் மாவட்டத்தில் தந்தை மற்றும் சித்தியை இளைஞர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு பேரையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டி ஏரியில் வீசியது தெரியவந்தது. இதனை அடுத்து இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, குடும்ப தகராறில் சமீப காலங்களில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. மிகவும் கொடூரமாக இளைஞர் ஒருவர் தந்தை மற்றும் சித்தியை கொலை செய்துள்ளார். சேலம் மாவட்டம் எடங்கனசாலை அருகே பூசாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (50). இவர் கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு மனைவியுட்ன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 45 வயதான ஜெயலட்சுமி என்பவரை மணந்தார். இதனை அடுத்து, பழனிசாமி அவரது மகன் ஆகாஷ் (24), ஜெயலட்சுமி அவரது 17 வயது மகள் ஆகியோர் ஒரே வீட்டில் விசத்து வந்துள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக பழனிசாமி மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி மாயமாகினர். இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், உறவினர்கள் ஆகாஷ் மற்றும் அவரது சகோதரியும் விசாரித்தனர். அதற்கு இருவரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததால், உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
Also Read : துன்புறுத்திய கணவன்.. ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி.. சென்னையில் ஷாக்




தந்தை, சித்தியை கொன்ற இளைஞர்
இதனை அடுத்து, உறவினர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆகாஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் தனக்கு தெரியாது என கூறி அவர், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தந்தை மற்றும் சித்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அதாவது, ஜெயலட்சுமி மற்றும் பழனிசாமியை துண்டு துண்டாக வெட்டி ஏகாபுரம் ஏரி மற்றும் அதலையூர் ஏரியில் வீசியதாக அவர் வாக்குமூலம் . இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை தேடினர். அப்போது, மூன்று சாக்கு மூட்டைகளில் இரண்டு பேரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தன. இதனை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதனை அடுத்து, போலீசார் அகாஷ் மற்றும் அவரது 17 வயது சகோதரியையும் கைது செய்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். காவல்துறையினரின் கூற்றுப்படி, பழனிசாமி, 17 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதற்கு ஜெயலட்சுமியுடன் உடன்தையாக இருந்துள்ளார்.
Also Read : ரீல்ஸ் மோகம்.. பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி.. சென்னையில் ஷாக்!
இதுகுறித்து 17 வயது சிறுமி ஆகாஷிடம் கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த ஆகாஷ், பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமியிடம் சண்டையிட்டுள்ளார். இதில், ஆத்திரத்தில் பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமியை அருகில் இருந்த கட்டையால் அடித்துள்ளார். இதில் அவர்கள் மயக்கமடைந்த நிலையில், இருவரையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டை போட்டு ஏரியில் வீசியது தெரியவந்துள்ளது.