வறுமையில் வாடிய குடும்பம்.. 3 பெண்கள் எடுத்த விபரீத முடிவு.. விருதுநகரில் அதிர்ச்சி!
Virudhunagar Crime News : விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் தாய் மற்றும் இரண்டு மகள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வறுமையில் வாடி வந்த நிலையில், மூன்று பெண்களும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறி கிடந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

விருதுநகர், ஆகஸ்ட் 21 : விருதுநகர் மாவட்டத்தில் 3 பெண்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் பாகங்கள் சிதறி கிடந்ததாக ரயில்வே போலீசார் கூறியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் காலனியை சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி ராஜவள்ளி. வயது 60. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு மாரியம்மாள் (30), முத்துமாரி (27), முத்துபேச்சி (25) என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் வயது கடந்தும் இவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை. இவர்களது குடும்பம் வறுமையில் இருப்பதால், ராஜவள்ளியால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. இதனால், ராஜவள்ளி மிகவும் வருத்தப்பட்டு வந்துள்ளார். இதில், மகள்கள் மாரியம்மாள் மற்றும் முத்துப்பேச்சி ஆகிய இரண்டு பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவார்.
இதனால், இவர்கள் மூன்று பேரும் மிகவும் வருத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று, ராஜவள்ளி, அவருடைய மகள்கள் மாரியம்மாள், முத்துப்பேச்சி ஆகியோரும் வறுமையால் தாங்கள் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என எண்ணி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அதன்படி, பட்டம்புதூர் ரயில் தண்டவாள பகுதிக்கு சென்று நின்றனர். அங்கு அந்த வழியாக வந்த ரயில்முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், மூன்று பேரின் உடல்களும் ஆங்காங்கே சிதறிகிடந்தன.




Also Read : விழுப்புரத்தில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் அடித்து கொலை.. அதிர்ச்சி பின்னணி!
3 பெண்கள் எடுத்த விபரீத முடிவு
உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன. இதற்கிடையில், வேலைக்கு சென்றுவிட்டு ராஜவள்ளியின் கணவர் தர்மர் மற்றும் மகள் முத்துமாரி ஆகியோர் வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் தாய் மற்றும் சகோதரிகள் இல்லாததால் அவர்களை தேடினர். அப்போது, அவர்களுக்கு மூன்று பெண்கள் உயிரிழந்தது கிடப்பது குறித்து அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், நேரில் சென்று பார்த்தனர்.
Also Read : துன்புறுத்திய கணவன்.. ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி.. சென்னையில் ஷாக்
அப்போது, இறந்தது ராஜவள்ளி, மாரியம்மாள், முத்துப்பேச்சி என அடையாளம் தெரிந்தது. இநத் சம்பவத்தை அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மர் மற்றும் ராஜவள்ளியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)