விழுப்புரத்தில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் அடித்து கொலை.. அதிர்ச்சி பின்னணி!
Villupuram BJP Functionary Murder : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்விரோதம் காரணமாக, ஜான்சன் என்பவர் பாஜக பிரமுகர் குமரை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜான்சனை தேடி வருகின்றனர்.

விழுப்புரம், ஆகஸ்ட் 20 : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பாஜக பிரமுகர் அடித்து கொலை (Villupuram BJP Functionary Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் குமரன் (48). இவர் பாஜக எஸ்சி, எஸ்டி பிரிவு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (40). இவர் ஆவடையார்பட்டில் நாய் பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது பண்ணைக்கு அருகில் குமரன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தில் குமரன் ஏர் ஓட்டியபோது, ஜான்சன் அதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால், இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதியான நேற்று மாலையில் குமரன் தனது நிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த ஜான்சன், குமரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜான்சன் கையில் வைத்திருந்த ஜல்லி கரண்டியால் குமரன் தலைமையில் தலையில் பலமுறை அடித்துள்ளார். இதில், குமரன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர், அங்கிருந்து ஜான்சன் தப்பி சென்றுள்ளார்.




Also Read : ஆதாரில் மோசடி.. இறந்த கருவுடன் வாழும் 16 வயது சிறுமி – நடந்தது என்ன?
பாஜக பிரமுகர் அடித்து கொலை
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே குமரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்தவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, போலீசார் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜான்சனை வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றர். மேலும், தலைமறைவாக உள்ள ஜான்சனை போலீசார் தேடி வருகின்றனர். பாஜக பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல.. 2025 மே மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக பெண் பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
Also Read : இளைஞருடன் வாழ கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. 53 வயது நபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!
வீட்டிற்கு அருகே நின்றுக் கொண்டிருந்த பாஜக பெண் பிரமுகரை கும்பல் ஓட ஓட விரட்டி, கொலை செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் மதுரை மத்திய தொகு மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளராக இருந்தார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.