AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!

Dharmapuri Woman Murdered : தர்மபுரி மாவட்டத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்த பெண்ணின் கள்ளக்காதலன் உள்ப 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
மாதிரிப் புகைப்படம்Image Source: tv9
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Apr 2026 10:22 AM IST

ஈரோடு மாவட்டம், கோபி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவர், இறந்துவிட்ட நிலையில் இவரது மனைவி புஷ்பா ராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர், வேட்டைக்காரன் கோவிலில் உள்ள தனியார் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25- ஆம் தேதி வேலைக்கு சென்ற புஷ்பா ராணி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, அவரது உறவினர்கள் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள பெரும்பாலை பகுதியில் புஷ்பாராணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த, பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக கோபி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

புஷ்பாராணி செல்போனில் போலீசார் ஆய்வு

அதில், புஷ்பாராணியின் செல்போனை ஆய்வு செய்ததில், கவுந்தப்பாடி, ஆலத்தூர் ஜீவா நகர் சூளைமேட்டை சேர்ந்த மணி என்பவரது மகன் மகேந்திரன், புஷ்பா ராணியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது. இதனால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தெரியவந்தது. அதில், புஷ்பா ராணி பணிபுரிந்த ஜவுளி கடையில் மகேந்திரனும் வேலை பார்த்து வந்தார்.

மேலும் படிக்க: கோடை விடுமுறை ஸ்பெஷல்.. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்த இருவர்

அப்போது, அவர்களிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில், மகேந்திரனை அடிக்கடி உல்லாசத்திற்கு வருமாறு புஷ்பராணி அழைத்ததாக தெரிகிறது. இதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த புஷ்பா ராணி நமது கள்ள உறவு குறித்து உனது மனைவியிடம் தெரிவித்து விடுவதாக மகேந்திரனை மிரட்டி உள்ளார். இதனை, மகேந்திரன் தனது அக்காள் கணவரான சதீஷிடம் தெரிவித்துள்ளார்.

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட இருவர்

பின்னர், கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி புஷ்பா ராணியை உல்லாசம் அனுபவிப்பதற்கு வருமாறு மகேந்திரன் கூறியுள்ளார். அதனை நம்பி வந்த புஷ்பாராணியை காட்டூர் பகுதிக்கு மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு, தன்னை மறந்து விடுமாறு புஷ்பா ராணியிடம், மகேந்திரன் கூறியுள்ளார். இதற்கு புஷ்பா ராணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கட்டு கம்பியால் புஷ்ப ராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததுடன், அவரது உடலை பெரும்பாலை பகுதியில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

மேலும் படிக்க: மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..

Follow Us