AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TVK Vijay: முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்..? பணிகளை தொடங்கிய மாநகராட்சி!

Tamil Nadu Chief Minister: தமிழக வெற்றிக் கழகத்திற்கு 118 என்ற எண்ணிக்கையிலான ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, நாளை அதாவது 2026 மே 9ம் தேதி காலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதையடுத்து, விஜய் பதவியேற்பு விழாவிற்கான பணிகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay: முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்..? பணிகளை தொடங்கிய மாநகராட்சி!
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 08 May 2026 21:00 PM IST

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) உள்பட 118 என்ற எண்ணிக்கையிலான ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, நாளை அதாவது 2026 மே 9ம் தேதி காலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதையடுத்து, விஜய் பதவியேற்பு விழாவிற்கான பணிகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 121 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, தவெக தலைவர் விஜய் 2026 மே 9ம் தேதியான நாளை காலை தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

முன்னதாக, விஜய் இன்று அதாவது 2026 மே 8ம் தேதி மாலை ராஜ்பவனுக்குச் சென்று, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி ஆளுநரிடம் முறைப்படியான கடிதத்தைச் சமர்ப்பித்தார். பதவியேற்பு விழா 2026 மே 9ம் தேதியான நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

121 எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு:

மதச்சார்ப்பற்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளில் ஆதரவைப் பெற்றதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக கூட்டணியின் பலம் 121 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது. தற்போதைய ஆதரவுக் கட்டமைப்பில், தவெக 108 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்களும், CPI-க்கு 2 உறுப்பினர்களும், CPM-க்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களும், VCK-க்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களும், IUML-க்கு 2 பிரதிநிதிகளும் உள்ளனர்.

தற்போது, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க நிலவும் முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது. மேலும் அரசாங்கத்தை அமைக்கத் தேவையான பெரும்பான்மை தங்களிடம் இருப்பதாக ஆளுநரிடம் தவெக உறுதியாகக் கூறுகிறது. தீவிரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், தவெக தலைவர் மக்கள் பவனுக்கு சென்று 3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

காலை 11 மணிக்கு பதவியேற்பு:

2026 மே 9ம் தேதியான நாளை காலை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில் நடைபெறவுள்ள விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கிட்டதட்ட 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திமுக மற்றும் அதிமுகவிற்கு பிறகு, புதிய கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. தவெக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வரத் தயாராகி வரும் நிலையில், இந்நிகழ்ச்சியில் மூத்த அரசியல் தலைவர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ஆட்சியில் பங்கு.. இது திருமா காலம் – வன்னி அரசு பகிர்ந்த பரபரப்பு தகவல்

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைப்பதற்கான அழைப்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை மக்கள் பவன் இன்னும் வெளியிடாத போதிலும், ஆதரவுக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் முறைப்படி உரிமை கோரியதைத் தொடர்ந்து, இந்த செயல்முறை அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Follow Us