தவெகவிற்கு ஆதரவு இல்லை – இந்திய முஸ்லீம் லீக் உறுதி – தவெகவிற்கு சிக்கல்?
சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வென்ற அந்த கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் தவெகவால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் தற்போது அந்த கட்சி மறுத்துள்ளதால் தவெகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த கட்சிக்கு தற்போது வரை 116 எம்எல்ஏகளின் ஆதரவு மட்டுமே உள்ளது.
சென்னை, மே 8 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வென்ற அந்த கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் தவெகவால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் தற்போது அந்த கட்சி மறுத்துள்ளதால் தவெகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த கட்சிக்கு தற்போது வரை 116 எம்எல்ஏகளின் ஆதரவு மட்டுமே உள்ளது.
முன்னதாக இந்திய முஸ்லீம் லீக் ஏற்கனவே தவெகவிற்கு ஆதரவு என தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை மறுத்துள்ளது. இதனால் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் சிக்கல் எழுந்துள்ளது. ஐயுஎம்எல் ஆதரவு கோரி நிர்மல்குமார், முஸ்தபா இருவரும் காதர்மொய்தீனுடன் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர். அன்றும் இன்றும் என்றும் திமுக கூட்டணிதான் என ஏற்கெனவே ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்




இந்திய முஸ்லீம் லீக் சார்பில் வெளியான அறிவிப்பு
இது தொடர்பாக இந்திய முஸ்லீம் லீக் சார்பாக வெளியான அறிக்கையில், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது. சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்
இதனையடுத்து இந்திய முஸ்லீம் லீக் ஆதரவு அளிக்காத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தவெக சார்பில் தற்போது வரை 116 எம்எல்ஏகள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்கிறது. முன்னதாக 3 வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் தற்போது வரை தவெக பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது அந்த கட்சி உறுப்பினர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.