AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்றும் வெளியில் இருந்தே ஆதரவு அளிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. செய்தியாளர்கள் சந்திப்பில் 2 கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்
வீரபாண்டியன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 May 2026 20:01 PM IST

சென்னை, மே 10 : சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  ஆட்சியமைக்க தவெகவிற்கு 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், அந்த கட்சி 108 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. மேலும் அந்த கட்சியின் தலைவர் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சியமைக்க முழு ஆதரவளித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவு அளித்தன. இது தவெக ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  விஜய்யின்  தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் வெளியில் இருந்தே ஆதரவு அளிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. செய்தியாளர்கள் சந்திப்பில் 2 கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : முதல்வராகும் விஜய்? தவெக ஆட்சியமைக்க விசிக வெளியில் இருந்து ஆதரவு?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அந்த கட்சி ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு

 

இதையும் படிக்க : DMK MP Kanimozhi: காங்கிரஸூடன் அமர விருப்பமில்லை.. மக்களவையில் தனி இருக்கை கேட்ட கனிமொழி எம்பி!

திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தவெகவுக்கு முதலில் ஆதரவு அளித்தது. இதனையடுத்து காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தவெகவிற்கு கிடைத்தது. இருப்பினும்,மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர்கள் தலா இரு உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோரிடம் ஆதரவு கோரினர். இது தொடர்பாக 3 கட்சிகளும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 

 

Follow Us