AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வராகும் விஜய்? தவெக ஆட்சியமைக்க விசிக வெளியில் இருந்து ஆதரவு?

தவெக ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தவெகவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ள திருமாவளவன், விஜய் அமைச்சரவையில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தேர்தலில் திருமாவளவன் போட்டியிட இரு தரப்பும் ஒப்புதல் என தகவல் தெரிவிக்கின்றன. 

முதல்வராகும் விஜய்? தவெக ஆட்சியமைக்க விசிக வெளியில் இருந்து ஆதரவு?
திருமாவளவன் - விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 May 2026 18:32 PM IST

சென்னை, மே 10 : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தவெகவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ள திருமாவளவன், விஜய் அமைச்சரவையில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தேர்தலில் திருமாவளவன் போட்டியிட இரு தரப்பும் ஒப்புதல் என தகவல் தெரிவிக்கின்றன.  இதற்கான பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் மே 8, 2026 இன்று மாலை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் தவெகவுடன் கூட்டணி தொடர்பாக பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அதன் பின் மே 9, 2026 காலை இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் அறிவித்தார்.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு – மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தவெகவுக்கு விசிக ஆதரவு?

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், விஜய் தனது இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் அவரை ஒரு ‘இளவரசரைப் போல’ முடக்கி வைத்துத் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். திமுகவை “மன்னராட்சி” என்று விமர்சித்துவிட்டு, ஐந்து தலைமுறை வாரிசு அரசியலைச் சுமக்கும் காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்திருப்பது மிகப் பெரிய நகைமுரண் என்று சிந்தனைச் செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இடதுசாரிகளையும், விசிக-வையும் எவ்விதத் தர்க்க நியாயமுமின்றி ஆதரவு கோரி அழைப்பது அரசியல் அறமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ஆட்சியமைக்கும் எந்த கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது – வெளியான பரபரப்பு அறிக்கை

இந்த நிலையில் தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அக்கட்சி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை விமர்சித்து விட்டு அந்த கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow Us