AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி.. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் அதிருப்தி..

இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என்று சொல்வது நியாயம் இல்லை. எனவே, கடந்த முறையை விட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களுடைய முடிவு. கடந்த முறையை விட குறைத்து 5 தொகுதிகள் தான் வழங்கப்பட்டால், அப்போது கட்சியின் மாநிலக் குழுவை கூட்டி, உரிய முடிவை எடுப்போம்.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி.. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் அதிருப்தி..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Mar 2026 09:12 AM IST

சென்னை, மார்ச் 15: தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது எங்களுக்கு மட்டும் ஏன் ஒதுக்க முடியாது?” என கம்யூனிஸ்ட் கட்சிகள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளன. அதோடு, புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை தருவது சிரமம் என கூறும் திமுக, காங்கிரஸ், தேமுதிகவுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது எப்படி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளன. இதேபோன்ற சூழ்நிலை திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து கட்சிகளுமே கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: பாசி பிடித்த தண்ணீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடும் எச்சரிக்கை

கம்யூனிஸ்டு கட்சிகள் போர்க்கொடி:

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடித்து வருகிறது. இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 3 கட்டமாகவும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் 2 கட்டமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த முறையை விட இம்முறை கூடுதலான தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்டு வரும் சூழலில், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவைக் காரணம் காட்டி, தொகுதிகளை குறைத்துக்கொள்ளுமாறு திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இரண்டு கம்யூனிஸ்ட்களும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

ஒரு சில நாட்களில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை:

இதுகுறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவுடனாக தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த ஒரு சில நாட்களில் தொடரும். இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. ஆனால், புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை தருவது சிரமம் என திமுக சொல்கிறது. இதே சிரமத்துக்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

தர முடியாது என்று சொல்வது நியாயம் இல்லை:

தேமுதிகவுக்கும் கூடுதலாக தொகுதிகள் வழங்கப்படும் என செய்திகள் வருகின்றன. இவர்களுக்கு எல்லாம் கூடுதல் தொகுதிகள் கொடுக்க வாய்ப்பிருக்கும் போது, இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என்று சொல்வது நியாயம் இல்லை. எனவே, கடந்த முறையை விட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களுடைய முடிவு. கடந்த முறையை விட குறைத்து 5 தொகுதிகள் தான் வழங்கப்பட்டால், அப்போது கட்சியின் மாநிலக் குழுவை கூட்டி, உரிய முடிவை எடுப்போம் என்றார்.

மேலும் படிக்க: கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – கரூர் அருகே பரபரப்பு

சீட்களை குறைத்துக்கொள்ள சொல்லும் திமுக:

தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறோம். இப்போது அதிகமான கட்சிகள் கூட்டணியில் சேர்ந்திருப்பதால், நீங்கள் ஒன்றை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகிறார்கள். நாங்கள் ஏற்கெனவே இருந்த இடங்களுடன் கூடுதலாக தரவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். திமுகவுக்கு சிரமம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், நாங்கள் எங்களுக்குரிய இடங்களைக் கேட்கிறோம் என்றார்.

Follow Us