Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!

TVK Chief Vijay : சமூக வலைதளங்களில் தமிழக அரசியல் வாதிகளில் முதலிடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளார். இவருக்கு அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உள்ளனர்.

சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!
தவெக தலைவர் விஜய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Sep 2025 09:07 AM IST

சென்னை, செப்டம்பர் 25 : சமூக வலைதளங்களில் தமிழக அரசியல் வாதிகளில் முதலிடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளார். விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் 1.46 கோடி பேரும், பேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக  இருக்கும் விஜய்க்கு இந்தியா மட்டுமின்றி, உலக முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். விஜயை ரசிர்களை உட்பட சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள் என பலரும் சமுக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் விஜய் தொடங்கி இருக்கிறார். 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய அவர், மாநாடு, பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்தி இருக்கிறார். தற்போது, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி எனும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவரின் பேச்சுக்கான லட்சக்கணக்கான தொண்டர்கள் பரப்புரையில் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில், விஜய்க்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு சோஷியல் மீடியாவிலும் விஜய் அக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, அரசியல் என்டரிக்கு பிறகு, பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தமிழக அரசியல் வாதிகளில் முதலிடத்தில் விஜய் உள்ளார்.

Also Read : முதலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி விசுவாசமாக இருக்கட்டும் – செல்வப்பெருந்தகை..

சோஷியல் மீடியாவில் கலக்கும் தவெக தலைவர் விஜய்

விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 46 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். மூன்று சமூக வலைதளத்திலும் ஒரே நபரை பின்தொடர்வார்கள். அப்படி பார்த்தால் சராசரியாக 93 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 31 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேரு பின்தொடர்ந்து வருகின்றனர்.

மொத்தமாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் 30 லட்சம் பேர் பின்தொடர்வார்கள். அடுத்ததாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 1.68 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 6.55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 5.77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

Also Read : டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை.. அதிமுகவில் பரபரப்பு!

துணை முதல்வல் உதயநிதி ஸ்டாலினை இன்ஸ்டாகிராமில் 98 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 11 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 37 லட்சம் பேரும் பின்தொடர்ந்து வருகின்றனர். சுமார் 16.25 பேர் சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலின் பின்தொடர்ந்து வருகின்றனர். தமிழக அரசியல் வாதிகளில் இவர்களை தவிர, மற்ற அனைத்து தலைவர்களை குறைவான நிபர்களே பின்தொடர்ந்து வருகின்றனர். இதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் டாப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.