AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட 5-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு.. இபிஎஸ்-க்கு புதிய நெருக்கடி!!

அதிமுகவில் மொத்தமுள்ள 1,800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் (அதாவது சுமார் 59% உறுப்பினர்கள்) பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என வேலுமணி தரப்பில் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுகவின் அடிப்படை விதிகளின்படி, கட்சியில் 5-ல் 1 பங்கு (20%) உறுப்பினர்கள் கோரினாலே பொதுக்குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட 5-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு.. இபிஎஸ்-க்கு புதிய நெருக்கடி!!
எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 May 2026 07:34 AM IST

சென்னை, மே 18: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அதிமுக தற்போது இரு அணிகளாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி அணிக்கு 22 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணிக்கு 25 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் படிக்க: முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!

வேலுமணி தரப்பினர் பதவியை பறித்த இபிஎஸ்:

சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் இரு அணிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தவெக அரசுக்கு எதிராகவும், எஸ்.பி. வேலுமணி அணியினர் ஆதரவாகவும் வாக்களித்தனர். தங்கள் தரப்புக் கொரடா உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் செயல்பட்டதாகக் கூறி, இரு தரப்பினரும் சபாநாயகரிடம் பரஸ்பரம் மனுக்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக வேலுமணி தரப்பைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளின் பதவிகளைப் பறித்துவிட்டு, புதியவர்களை அந்தப் பதவிகளில் நியமித்தார். இதனால் அதிருப்தியடைந்த வேலுமணி தரப்பினர், தங்களை நீக்கியது செல்லாது என்று கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பொதுக்குழுவைக் கூட்ட கையெழுத்து இயக்கம்:

கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கவும், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிக்கவும் வேலுமணி தரப்பினர் உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் அதிரடி ‘கையெழுத்து இயக்கம்’ ஒன்றையும் அவர்கள் தொடங்கியுள்ளனர். வேலுமணி தரப்பின் இந்த முயற்சிக்குக் கையெழுத்திட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், எடப்பாடியின் தடையையும் மீறி வேலுமணி தரப்புக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு:

அதிமுகவில் மொத்தமுள்ள 1,800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் (அதாவது சுமார் 59% உறுப்பினர்கள்) பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என வேலுமணி தரப்பில் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுகவின் அடிப்படை விதிகளின்படி, கட்சியில் 5-ல் 1 பங்கு (20%) உறுப்பினர்கள் கோரினாலே பொதுக்குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தற்போது 5-ல் 3 பங்கு (60% நெருக்கடி) உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்டக் கோரி கையெழுத்திட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமிக்குச் சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வேலுமணி தரப்பின் அடுத்தகட்ட திட்டம்:

பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனுவை இன்னும் ஓரிரு நாட்களில் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்க வேலுமணி தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டால், தங்களது அணியின் தலைமையிலேயே தனியாகப் பொதுக்குழுவைக் கூட்டி அதிரடி முடிவுகளை எடுக்கவும் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி பூசல்.. மேலும் 2 மாவட்ட செயலர்களை நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Follow Us