AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 8 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை – கோழிகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

Bird Flu Alert : தமிழ்நாட்டில் H5N1 என்ற வைரசால் காகங்கள் இறந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்த 8 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நன்கு வேகவைத்த கோழி இறைச்சியையே சாப்பிட வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 8 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை – கோழிகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Feb 2026 17:06 PM IST

சென்னை, பிப்ரவரி 11 : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காகங்கள் உயிரிழந்து வரும் நிலையில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கோழிகளுக்கு பரவாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை அடையாறு (Adyar) பகுதியில் கடந்த ஜனவரி 2026 மாதம் பல இடங்களில் காகங்கல் திடீரென உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இறந்த காகங்களை பரிசோதனைக்காக உடனடியாக மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள விலங்கு நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை H5N1 என்ற பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பை தொடங்கியது. குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளதால், எல்லை பகுதிகளில் தீவிர சோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. கேரளாவை ஒட்டிய 26 இடங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இதையும் படிக்க : பொறுமை இழந்த கூட்டணி கட்சிகள்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? திமுக வெளியிட்ட அறிவிப்பு..

8 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை

காகங்கள் ஒரே இடத்தில் மட்டும் வாழ்வதில்லை என்பதால் ஒரு காகம் பாதிக்கப்பட்டால் மற்ற பறவைகளுக்கும் வைரஸ் பரவும் அபாயம் அதிகம். மேலும், சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காகங்கள் உயிரிழந்துள்ளன. இதனால் அந்த மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்த நிலையில் அவை பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் இறந்த காகங்களின் உடலில் கண்டறியப்பட்ட H5N1 வைரஸ் இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக உறுதி செய்யப்படவில்லை என்று கால்நடை பராமதிப்புத்துறை இயக்குநர் அம்ரித் தெரிவித்துள்ளார். இருப்பினும் கோழிகளுக்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திமுக – காங்கிரஸ் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை கொடுத்த எம்.பி கனிமொழி.. என்ன சொன்னார் தெரியுமா?

பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை

  • இறந்த பறவைகளை கைகளால் தொடக் கூடாது, கையுறை முககவசம் கட்டாயம்.
  • இறந்த பறவைகள் ஆழமான குழிகள் தோண்டி புதைக்கப்பட வேண்டும்.
  • பறவைகள் இறந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
  • கோழி இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்

 

Follow Us