AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டணத்தைக் குறைக்காத தனியார் பள்ளிகள்.. அமைச்சர் ராஜ்மோகன் போட்ட அதிரடி உத்தரவு!!

School Education Minister Rajmohan: தனியார் பள்ளிகள் உரிமம் புதுப்பித்தலில் லஞ்ச முறைகேடுகள் ஒழிக்கப்பட்ட பின்னரும் கட்டணத்தைக் குறைக்காத பள்ளிகளைக் கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

கட்டணத்தைக் குறைக்காத தனியார் பள்ளிகள்.. அமைச்சர் ராஜ்மோகன் போட்ட அதிரடி உத்தரவு!!
அமைச்சர் ராஜ்மோகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Jul 2026 07:12 AM IST

சென்னை, ஜூலை 31: தனியார் பள்ளிகள் உரிமம் புதுப்பிப்பதில் நிலவி வந்த இடைத்தரகர்கள் மற்றும் லஞ்ச நடைமுறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட போதிலும், மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் குறைக்காத தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய சிறப்புக் குழு அமைக்கப்படும் எனப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள்:

சமீபத்தில் பள்ளித் கல்வித்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது எந்தவொரு தனியார் பள்ளியும் உரிமம் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தர வேண்டியதில்லை என்றும், அனைத்தும் வெளிப்படையான முறையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டணத்தைக் குறைக்காத தனியார் பள்ளிகள்:

அரசு சார்பில் லஞ்ச நடைமுறைகள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் வசூலிக்கும் சேர்க்கைக் கட்டணம் மற்றும் ஆண்டுக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்ப்புடன் இருந்தனர். இருப்பினும், பல தனியார் பள்ளிகள் தொடர்ந்து அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக அரசிற்குத் தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “லஞ்ச நடைமுறைகளை ஒழித்த பின்னரும், பெற்றோர்களிடம் கட்டணத்தை வெளிப்படைத்தன்மையுடன் வசூலிக்கப் பல பள்ளிகள் முன்வரவில்லை. எனவே, முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தச் சிறப்புக் குழு தனியார் பள்ளிகளின் கட்டண அமைப்பை தீவிரமாகக் கண்காணித்து முறைப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

நடுத்தரக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் நிம்மதி:

தனியார் பள்ளிகளில் நுழைவுக் கட்டணம், நன்கொடை மற்றும் பல்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களால் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகி வருகின்றன. அரசின் இந்த அதிரடிக் கட்டணக் கண்காணிப்புக் குழு சரியான முறையில் செயல்படும் பட்சத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரிய அளவிலான நிதிச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us