தொகுதி மறுவரையறை மசோதாவால் ‘தமிழ்மொழிக்கு ஆபத்து… ஜனநாயகம் முடிவுக்கு வரும் – ராகுல் காந்தி எச்சரிக்கை
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இந்தியாவின் தொகுதிகளை மறுசீரமைத்தால், நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது முழுமையான தாக்குதல் தொடங்கும் என்றார்.
சென்னை, நவம்பர் 29 : மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதவரவு அளிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் திமுகவின் மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை (MK Stalin) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்களது முடிவில் மாற்றமில்லை என தெரிவித்தார்.
‘தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு’
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, சென்னை விமான நிலையத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினுடன், மிகவும் நல்ல முறையிலும், சுமுகமாகவும் சந்திப்பு நடைபெற்றது. எங்களுடைய கருத்துகளை அவரிடம் விளக்கினோம். தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி, அந்த 850 தொகுதிகளையும் பாஜக தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க அனுமதிப்பது இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.




இதையும் படிக்க : தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு என்ன? ஸ்டாலின்- ராகுல் சந்திப்புக்கு நடுவே கனிமொழி கூறிய அந்த வார்த்தை!
செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
#WATCH | Chennai, Tamil Nadu: After meeting DMK President MK Stalin, Lok Sabha LoP Rahul Gandhi says, “We had a very nice, cordial meeting with Thiru Stalin ji. We explained our view to him. Our view is that an 850-seat Parliament with delimitation and allowing the BJP to completely shape those 850 seats, change the nature of the constituencies in India, is not only damaging to the Indian nation, but it is also damaging to South India and particularly to Tamil Nadu…We requested brother Stalin, who is a staunch defender of Tamil Nadu, that he needs to defend Tamil Nadu and ensure that this dirty design of the BJP is not allowed to happen…Once the BJP reshapes an 850-seat Lok Sabha, democracy in India will be finished.”
— ANI (@ANI) November 29, 2026
மேலும் பேசிய அவர், தமிழகத்தின் உரிமைகளைக் காக்க உறுதியாகச் செயல்படும் சகோதரர் ஸ்டாலின், இந்த விவகாரத்திலும் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பாஜகவின் இந்தத் தவறான திட்டம் செயல்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டோம். 850 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையை பாஜக தனது விருப்பத்திற்கு ஏற்ப மறுசீரமைத்துவிட்டால், இந்தியாவில் ஜனநாயகமே முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக என்ன கூறியுள்ளது அல்லது என்ன முடிவு செய்துள்ளது என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுடைய கருத்து என்ன என்பதை மட்டுமே நான் உங்களிடம் கூறுகிறேன். இது தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை அவரிடம் எடுத்துரைத்தோம். தேசப்பற்று கொண்ட அனைவரையும் போல, இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக சகோதரர் ஸ்டாலினும் உறுதியாக நிற்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கிறார்.. அவரை பார்க்க ராகுல் காந்தி வந்திருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
‘தமிழ்மொழி மீதான தாக்குதல் தொடங்கும்’
மேலும், ”ஆர்.எஸ்.எஸ். ஒரு தமிழர் விரோத அமைப்பு. 850 தொகுதிகளைக் கொண்ட மக்களவையை உருவாக்கும் வகையில் பாஜக இந்தியாவின் தொகுதிகளை மறுசீரமைத்தால், நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது முழுமையான தாக்குதல் தொடங்கும். நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.