AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாழ்வா சாவா என்ற போராட்டம்! தொகுதி மறுவரையறையை ஆதரித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

M.K. Stalin Explains Why Supported Delimitation : மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்தது ஏன் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வாழ்வா சாவா என்ற போராட்டம்! தொகுதி மறுவரையறையை ஆதரித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!
மு.க.ஸ்டாலின்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Nov 2026 19:02 PM IST

நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நாள் திங்கள்கிழமை கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். இவர்களது சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு ஏன்

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்ற விளக்கத்தை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலக் கட்சிகள் குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு இது வாழ்வா சாவா என்ற போராட்டமாகும். அதை தடுக்க தற்போது கொண்டுவரப்பட கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிற வேறு வழியில்லை. தற்போது, என்னை வந்து சந்தித்த கட்சிகளின் தலைவர்களிடமும் வேறு மாற்று திட்டமும் இல்லாமல் உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கிறார்.. அவரை பார்க்க ராகுல் காந்தி வந்திருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

25 ஆண்டுகளுக்கு தமிழக அரசியல் வலிமை

நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கின்ற எம்.பி.க்கள் பலத்தால் 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் அரசியல் வலிமையை காப்பாற்றி உள்ளோம். ரிஸ்க் எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ வாய்ப்பு இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியாகும். அண்ணா முதல் தலைவர் கருணாநிதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். அதில், வெற்றி பெறுவோம். திமுக கூட்டணி நிலைப்பாட்டில் அப்போதும், இப்போதும், எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்.

மசோதா நிராகரிப்பால் தமிழகத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும்

முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இத்தகைய முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால், இந்த மசோதா தற்போது தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். தமிழகம் எப்போது எங்களுக்கு ஃபர்ஸ்ட் தான் என்று தெரிவித்தார். இதனால், தொகுதி மறுவரையறைக்கு திமுக முழு ஆதரவை அளித்து உள்ளது திட்டவட்டமாகி உள்ளது.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. நாடே எதிர்பார்த்த திமுக நிலைப்பாடு.. காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு!

Follow Us