தொகுதி மறுவரையறை மசோதா.. நாடே எதிர்பார்த்த திமுக நிலைப்பாடு.. காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு!
Constituency Delimitation Bill DMK Stance : மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை மசோதோவில் திமுகவின் நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாகவும், காங்கிரஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், நாளை தாக்கல் செய்யப்படும் மசோதவுக்கு திமுக ஆதரவளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பாஜக அரசு நாளை திங்கட்கிழமை கொண்டுவர உள்ளது. இதற்கு, பாஜகவுக்கு, திமுக தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கூறி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து முடிவை பரிசீலனை செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார், கேரளம், தெலுங்கானா மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் சென்னை வந்துள்ளனர்.
திமுக முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி..
அவர்கள், ஆழ்வார்பேட்டையில் உள்ள மு. க. ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை, மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். தொடர்ந்து, ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்திய ஸ்டாலின், அவரை ஆரத்தழுவி கட்டியணைத்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ராஜாத்தி உள்ளிட்டோருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
திமுக நிலைப்பாட்டை அறிவித்த மு.க.ஸ்டாலின்
இந்த ஆலோசனையானது சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நிலையில், திமுகவின் நிலைபாட்டை மு. க. ஸ்டாலின் பகிரங்கமாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், திமுக கோரிய 2 முக்கிய அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மசோதா மீதான ஆதரவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கூட்டணி கட்சியினர் அறிவுறுத்தி உள்ளனராம். நியாயமான மறு வரையறையை திமுகவின் நிலைப்பாடு என ஸ்டாலின் தெரிவித்ததாகவும், கடந்த முறை மசோதாவை எதிர்த்த திமுக தற்போது ஆதரவு அளித்தது ஏன் எனவும் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
#FairDelimitation என்கிற நிலைப்பாட்டில் திமுக அதே உறுதியோடு இருக்கிறது. https://t.co/Aix5Cd4N2y
— DMK IT WING (@DMKITwing) November 29, 2026
திமுக நிலைப்பாட்டில் உறுதி- காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு
இதில், திமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், காங்கிரஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ளது. அதில்,
முன்பு ஆதரவு அளிக்க மறுத்த காரணம்
- முன்பு தமிழக எம்பிக்கள் இடங்கள் 39- இல் இருந்து 31 அல்லது 32- ஆக குறையும் ஆபத்து இருந்தது.
- தமிழகத்தின் பங்கு 5.71 சதவீதத்தில் இருந்து 5.89 என நிலை இருந்தது.
- 2027 கணக்கெடுப்பு வரையே பாதுகாப்பு எளிதாகும் அபாயம் இருந்தது.
தற்போது ஆதரவு தெரிவிக்க காரணம்
- தற்போது, தமிழக எம்பி இடங்கள் 59- ஆக உயரும் வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தின் பங்கு 7.23 சதவீதம் வரை பாதுகாக்கப்படும் நிலை உள்ளது.
- 2051- ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு 25 ஆண்டுகளுக்கு தமிழக எம்பிக்கள் இடங்கள் குறையாது தெரிவிக்கப்பட்டுள்ளது.