AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கட்சி அல்ல.. நாட்டின் நலனே முக்கியம்.. பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி

PM Modi on Women's Reservation : பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து சமூக ஊடகங்களில் மீண்டும் பதிலளித்துள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததோடு, பெண்கள் அதிகாரமளித்தலுக்கான தனது உறுதிப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கட்சி அல்ல.. நாட்டின் நலனே முக்கியம்..  பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Nov 2026 17:48 PM IST

பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சமூக ஊடகங்களில் மீண்டும் விமர்சித்துள்ளார். கட்சி நலன்களை விட நாட்டின் நலன்களே தங்களுக்கு முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்திய பிரதமர், பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம் எந்தச் சூழ்நிலையிலும் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 2029 தேர்தல்கள் மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறை தொடர்பான இந்த முக்கிய நிகழ்வு குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி

பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து சமூக ஊடகங்களில் மீண்டும் பதிலளித்துள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததோடு, பெண்கள் அதிகாரமளித்தலுக்கான தனது உறுதிப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார். தனது எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் பேசும் பிரதமர் மோடி, பெண்களின் உரிமைகளுக்காகவும் பங்களிப்பிற்காகவும் பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அந்த முயற்சியில் தானும் பல ஆண்டுகளாக ஒரு பங்காளியாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அனைத்து தடைகளும் அகற்றப்படும் என்று மோடி உறுதியளித்தார்.

இதையும் படிக்க : நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு உறுதி! தடைகளை நீக்குவோம் – பிரதமர் மோடி அதிரடி உறுதி

தேசிய நலனுக்கு முன்னுரிமை

மேலும் பேசிய அவர், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாஜக-என்டிஏ கூட்டணியின் உறுதிப்பாடு அசைக்க முடியாதது . தேசிய நலன் எப்போதுமே தனது அரசின் முதல் முன்னுரிமையாக இருந்து வருகிறது. சிலருக்குக் கட்சி நலன்களே எல்லாம் ஆகும்போதும், தேசிய நலன்களை விடக் கட்சி நலன்களே முக்கியமாகக் கருதப்படும்போதும், பெண் சக்தியும் தேசிய நலன்களும் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். என்றார்.

பிரதமர் மோடியின் பதிவு

 

நாரி சக்தி வந்தன் திருத்தத்தை நாங்கள் நிச்சயமாக அமல்படுத்துவோம்.

தொடர்ந்து பேசிய அவர் நாரி சக்தி வந்தன் திருத்தத்தை தற்போதைய காலகட்டத்தின் மிக அவசரமான பிரச்னை. எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “எங்கள் தன்னம்பிக்கை அசைக்க முடியாதது. பாதி மக்களின் கனவுகளுக்காகவும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பாஜக! திமுகவிடம் முக்கிய கோரிக்கை!

முன்னதாக பிரதமர் மோடி நவம்பர் 28,2026 சனிக்கிழமையன்று ஒரு காணொளிச் செய்தியைப் பகிர்ந்திருந்தார். அதில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கத் தனது அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், பெண்களின் உரிமைகளுக்குத் தடையாக இருக்கும் “அனைத்துத் தடைகளையும் அகற்றுவதாகவும்” அவர் உறுதியளித்திருந்தார்.

Follow Us