AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லெட்டரை தவறவிட்ட போட்டியாளர்களுக்கு கிஃப்ட் கொடுத்த விஜய் சேதுபதி – பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

Vijay Sethupathis Emotional Gift: நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பேமிலி வீக்காக அமைந்த நிலையில், குடும்பங்களிடமிருந்து போட்டியாளர்களுக்கு லெட்டர் கிடைத்தது. ஆனால் அதை 4 போட்டியாளர்கள் தவற விட்டிருந்த நிலையில், அதை கிஃப்டாக விஜய் சேதுபதி மீண்டும் கொடுத்துள்ளார்.

லெட்டரை தவறவிட்ட போட்டியாளர்களுக்கு கிஃப்ட் கொடுத்த விஜய் சேதுபதி  – பிக் பாஸ் ப்ரோமோ இதோ!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Nov 2026 19:11 PM IST

தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சிறப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி (Bigg Boss Season 10). இந்நிகழ்ச்சியானது கடந்த 2026 ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். இந்த வாரத்தில் எவிக்ஷன் இருக்கும் என நினைத்த நிலையில், இந்த வாரத்தில் எந்த போட்டியாளர்களும் வெளியேற்றப்படவில்லை. அந்த விதத்தில் வரும் வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 12 வாரத்தை கடந்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சியானது முழுமையாக நிறைவடைந்துவிடும் என்ற நிலையில், இறுதிக்கட்டத்தில் இந்நிகழ்ச்சி உள்ளது. இந்நிலையில் இன்று (29/11/2026) போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்திருந்த நிலையில், பேமிலி லெட்டரை விடுத்த 4 போட்டியாளர்களுக்கு அந்த லெட்டரை மீண்டும் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: பேக் டூ பேக்.. போட்டியாளர்களை தனி தனியாக அழைத்து அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!

பிக் பாஸில் போட்டியாளர்களுக்கு லெட்டரை கிஃப்டாக கொடுத்த விஜய் சேதுபதி:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி பேசுகையில், “இப்போது ஒரு டாஸ்க் விளையாடலாமா? என கேட்டார். உடனே ஜேசன், வாசன், முனியம்மாள் மற்றும் பிருத்வி நீங்கள் 4 பேர் தனியா வாருங்க.. மேலும் ஒருவர் ஸ்டோரேஜ் அறையில் இருக்கும் அதை எடுத்துவாருங்கள் என கூறினார். அன்சர் அந்த அறைக்கு சென்று, துணியால் மூடப்பட்டிருந்த ஒன்றை கொண்டுவந்தார். நான்குபேரும் அந்த துணியை விலக்கி பாருங்கள் என விஜய் சேதுபதி கூறினார். உடனே துணியை எடுத்த ஜேசன் சந்தோஷத்தில் துள்ளி குதித்திருந்தார்.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

லெட்டர் டாஸ்கில், வாசன், முனியம்மாள், ஜேசன் மற்றும் பிருத்வி ஆகியோர் தவறவிட்ட லெட்டரை கிஃப்டாக விஜய் சேதுபதி கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், இப்போது புரிகிறதா? தவறவிட்ட விஷயம் கையில் மீண்டும் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்று என கூறினார். மேலும் அந்த லெட்டரை எடுத்து அவர்கள் நால்வரும் படிக்கும்படியாக இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 84வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்நிகழ்ச்சியானது முழுமையாக நிறைவடைந்துவிடும். கிட்டத்தட்ட 12 வாரத்தை கடந்த இந்த நிகழ்ச்சியானது 13வது வாரத்திற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளது. மேலும் வரும் வாரத்தில் பணப்பெட்டி வாரமாக அமையும் என கூறப்படுகிறது. எந்த போட்டியாளர் பணத்தை எடுத்துவிட்டு இப்போட்டியிலிருந்து விலகுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us