சூர்யா -டிஜே ஞானவேல் கூட்டணி படமான சூர்யா48 ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்!!
Suriya 48 Movie: ரசிகர்களிடையே பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 3 படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா48 படத்தில் நடிக்கும் நிலையில், இதன் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டுவரும் ஹீரோவாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் சீன் (Scene Movie). இதை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சுர்யோயா, புதிய படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இவர் ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் (TJ Gnanavel) இயக்கத்தில் 2வது முறையாக இணைந்த திரைப்படம்தான் சூர்யா48 (Suriya48).
இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருடன் இளம் நடிகை கயாடு லோஹர் இணைந்து நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இயக்குநர் பாலாவின் புதுப் படத்தின் நாயகன் இவரா? கவனம் ஈர்க்கும் தகவல்!
சூர்யாவின் 48வது திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இயக்குநர் டிஜே ஞானவேல் மற்றும் சூர்யாவின் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ள திரைப்படம்தான் சூர்யா 48. இப்படத்தை காந்தாரா படத்தின் தயாரிப்புநிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இதில் சூர்யா, கயாடு லோஹர் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: பேக் டூ பேக்.. போட்டியாளர்களை தனி தனியாக அழைத்து அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
மேலும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி முக்கியமான வேடத்தில் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சிறப்பாக நடந்துவரும் நிலையில், 2 கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் முழு ஷூட்டிங் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 2027 ஆண்டு மே மாதத்தில் படத்தி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளாராம்.
சூர்யா48 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
Exclusive 🥭
Suriya48 @hombalefilms targeting a pan-Indian theatrical release around May 2027. Proper dubbed Hindi wide release. It’s mix of content + action blended making style @SaiAbhyankkar
Trying digital type music & Bgm scoresS in double role( buzz)
#Scene #Suriya48 https://t.co/jorLRczoHH
— FʀᴜꜱᴛʀᴀᴛᴇD DʀᴀɢᴏN🐉 (@FrustrateDragon) November 29, 2026
நடிகர் சூர்யா இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் நடிக சூர்யா மருத்துவராக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் ஐஞ்சு ரூபாய் டாக்டர் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகர் சூர்யா ரெட்டை கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.