கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கல்..பறந்த புகார்…களமிறங்கும் சிபிஐ?

Kalaignar Magalir Urimai Thogai: தமிழகத்தில் ஒரே நாளில் மகளிர்களுக்கு ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கல்..பறந்த புகார்...களமிறங்கும் சிபிஐ?

மகளிர் உரிமை தொகை வழங்கியதில் சிபிஐ விசாரணை தேவை

Published: 

16 Feb 2026 09:32 AM

 IST

தமிழகத்தில் 1.31 கோடி மகளிர்க்கு திமுக அரசு சார்பில் மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மகளிருக்கு முன்கூட்டியே ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் சிலர் செயல்படுவதாகவும், இதனை முறியடிப்பதற்காகவே முன்கூட்டியே மகளிருக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் மே மாத சிறப்பு தொகை ரூ.2000 வழங்கப்படுவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசு ரூ.6500 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. தேர்தல் நெருங்குவதன் காரணமாகவே வாக்காளர்களை கவர்வதற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

தலைமைச் செயலர்-தேர்தல் ஆணையத்துக்கு மனு

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரே நாளில் ரூ.5000 வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஜி. எஸ். மணி தலைமைச் செயலர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..

தேர்தலை மையமாக வைத்து முறைகேடு

மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.5000 உதவி தொகை கொடுத்தால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எந்த ஒரு மகளிரும் 3 மாதங்களுக்கான முன்பணத்தை முன்கூட்டியே கேட்டு கோரிக்கை வைக்காத நிலையில், தமிழக அரசு தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பயனாளிகளுக்கு ஒரே நாளில் மகளிர்களுக்கு ரூ.5000 த்தை வரவு வைத்துள்ளது. இதற்காக ஒரே நாளில் மொத்தமாக ரூ.6,500 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்தே இந்த உரிமை தொகை முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.

சிபிஐ விசாரணை தேவை

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிதிகளின் விரிவான மற்றும் சீரான கணக்கியல் ஒழுங்கு மீறப்பட்டுள்ளது. எனவே, வாக்குகளை பெறுவதற்காக ரூ.5000 வழங்கியது சட்ட விதிகளுக்கு மாறானதாகும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கால அட்டவணைக்கு மாறாக ஒரே நாளில் இவ்வளவு தொகையை வழங்கியது பொது நல நிதிகளை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதில், சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் அல்லது சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காதல் திருமணம்.. முதிய தம்பதியின் உருக்கமான முடிவு.. சென்னையில் சோகம்..

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?