AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!

Tvk Leader Vijay: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏற்பட்ட குளறுபடியை தொடர்ந்து, அவரது சார்பில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் தேர்தல் அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பித்துள்ளார்.

வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!
பெரம்பூரில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Apr 2026 17:04 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி தேதி ஆகும். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே தான் போட்டியிடக்கூடிய பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து, அவர் பெரம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 2- ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் குளறுபடி

அதில், கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது போலீசார் பதிவு செய்த வழக்கு மற்றும் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது பதியப்பட்ட வழக்கு ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார். இதில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மதுரை மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விஜய் குறிப்பிடவில்லை. இதனால், உண்மைக்கு மாறான தகவலை விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்ததாகவும், இதனால் அவரது வேட்ப மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க: “விஜய் என் தம்பி.. அவருக்கு என் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் உண்டு”.. குஷ்பு நெகிழ்ச்சி!!

பெரம்பூரில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்

இந்த நிலையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 4) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தார். மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ரேம்ப் வாக் மீது ஏறிய இளைஞரை பவுன்சர்கள் தூக்கி கீழே வீசியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, கட்சியின் தலைவர் விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

மதுரை வழக்குப்பதிவு குறித்து விளக்கம்

ஆனால், பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது இந்த வழக்கு தொடர்பான விவரம் தனக்கு தெரியவரவில்லை எனவும், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது இது குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் தவெக சார்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், ஒரு தொகுதியில் வேட்பாளர் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி உள்ள நிலையில், விஜய் 2 வேட்பு மனுக்களை மட்டுமே தாக்கல் செய்திருந்தார். அதன்படி, திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜயின் சார்பில் அவரது மாவட்ட செயலாளர் இன்று சமர்ப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!

Follow Us