கடந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை, ஏப்ரல் மாத முதல் நாளான நேற்று கடும் உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று ஒரேநாளில் சவரனுக்கு 3,040 வரை உயர்ந்தது. குறிப்பாக, நீண்ட நாட்களாக 1,10,000க்குள் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் மீண்டும் 1,12,000ஐ தாண்டி மீண்டும் உச்சம் தொடத் தொடங்கியது.