மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தனது புதிய படமான 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டோவினோ தாமஸ், இதற்கு நகைச்சுவையுடன் விளக்கமளித்துள்ளார்.