AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கேப்டனாக சூர்யாகுமார் யாதவ்.. ஹர்திக் எங்கே? டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

Mumbai Indians Captain Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியிருப்பதால், இன்றைய போட்டிக்கு மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

IPL 2026: கேப்டனாக சூர்யாகுமார் யாதவ்.. ஹர்திக் எங்கே? டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
Dc Vs Mi 1st Half
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Apr 2026 17:16 PM IST

ஐபிஎல் 2026 தொடரின் (IPL 2026) எட்டாவது போட்டியானது அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் திடீரென கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அதன்படி, ஹர்திக் பாண்ட்யா விளையாடாதது ஏன்? சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன் உள்ளிட்ட காரணங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மீண்டும் மீண்டும் அதே சிக்கல்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 24 லட்சம் அபராதம்.. காரணம் இதுதான்!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு உடல்நலக்குறைவா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியிருப்பதால், இன்றைய போட்டிக்கு மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஹர்திக் இல்லாததால், சூர்யகுமார் யாதவ் MI அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அதேநேரத்தில், மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்ட 3 மாற்றங்களையும் மும்பை இந்தியன்ஸ் அணி மேற்கொண்டுள்ளது.

டாஸுக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் என்ன கூறினார்?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டாஸுக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ”ஹர்திக் பாண்ட்யாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆரோக்கியமாகத் தெரியவில்லை. அதனால் இன்றைய போட்டிக்கு அவர் தகுதியுடன் இல்லை. எனவே இன்று நான் அவருக்குப் பதிலாக என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். கேகேஆர் அணிக்கு எதிரான வெற்றியானது 13-14 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றால், அணியில் மிகுந்த நல்ல உணர்வை கொடுத்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் இந்த அருண் ஜெட்லி ஸ்டேடியம் வான்கடே மைதானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே, பொறுப்புடன் ஆடுவது மிக முக்கியம்” என்றார்.

3 மாற்றங்களைச் செய்த மும்பை:

சூர்யகுமார் மும்பை அணியில் மூன்று மாற்றங்களைச் செய்தார். அதன்படி, ஆடும் லெவனில் டிரென்ட் போல்ட்டிற்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் கார்பின் போஷ் சேர்க்கப்பட்டார். ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டார். அல்லா கசன்ஃபருக்குப் பதிலாக மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தபோதிலும், மும்பை அணி இந்த மூன்று மாற்றங்களுடன் டெல்லிக்கு எதிராகக் களமிறங்கியது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதும் குஜராத் – ராஜஸ்தான்.. பிட்ச் நிலவரம் எப்படி..?

மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் லெவன்:

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நமன் தீர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மிட்செல் சான்ட்னர், கார்பின் போஷ், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா

Follow Us