AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சென்னைக்கு மீண்டும் சோதனை.. பதறாமல் வெற்றியை பதித்த பஞ்சாப்!

CSK vs PBKS:ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 7வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 3ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai super kings) அணி 209 ரன்கள் எடுத்தது.

IPL 2026: சென்னைக்கு மீண்டும் சோதனை.. பதறாமல் வெற்றியை பதித்த பஞ்சாப்!
Csk Loss Vs Pbks
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Apr 2026 23:32 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 7வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 3ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai super kings) அணி 209 ரன்கள் எடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மீண்டும் சொதப்ப, 20 வயதான ஆயுஷ் மத்ரே 73 ரன்கள் எடுத்து ஒரு வலுவான இன்னிங்ஸை விளையாடினார். இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

ALSO READ: முதல் வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றமா?

துபே-சர்பராஸ் ஷைன்

இந்த போட்டியில் சர்பராஸ் கான் வெறும் 12 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 32 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மாவால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சிவம் துபே தனது அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்தி கடைசி நேரத்தில் 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டத்தின் மூலம் சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது.

210 ரன்கள் இலக்கு:


210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி கிளப்பிய ஆர்யா வெறும் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் தொடர்ச்சியாக 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பிரப்சிம்ரனும், 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கூப்பரும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக, ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்த வதேராவும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு தண்ணீர் காட்ட தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அசத்த, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. 29 பந்துகளில் அரைசதம் அடித்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அன்ஷூல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழக்க, 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த வதேராவும் பின்னாடியே வெளியேறினார்.

ALSO READ: இருநாட்டு தொடரை நடத்துங்க.. பிசிசிஐக்கு கடிதம் எழுதிய வங்கதேசம்..!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், ஷஷாங்க் சிங் மற்றும் ஸ்டோனிஸ் இணைந்து 8 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை தேடி கொடுத்தனர்.

Follow Us