AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் புகையிலை பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

புகையிலை பொருட்கள் காரணமாக புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புகையிலை பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Jun 2026 22:30 PM IST

சென்னை, ஜூன் 2: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் புகையிலை மற்றும் நிகோட்டினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும் என்பதால் இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், எடுத்து செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

புகையிலை பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

புகையிலை பொருட்கள் காரணமாக புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புகையிலை பொருட்களால் வாய் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பான் மசாலா குட்கா போன்ற பொருட்களால் கடுமையான வாய் புற்று நோய்க்கு காரணமாக அமைகின்றன. இளம் தலைமுறையினரிடையே இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியத. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்! வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை..!

குறிப்பாக, புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த கடந்த 2013 ஆம் ஆண்டு குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே 23, 2026 ஆம் தேதியுடன் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்து. இதனையடுத்து மேலு ஓராண்டுக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட் களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், எடுத்து செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையானது வரும் 2027ம் ஆண்டு மே 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் – மத்திய அரசுடன் ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல்

தமிழக அரசு இந்தத் தடையை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சட்ட விரோதமாக இந்தப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், இந்தப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நீட்டிப்பு பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

 

Follow Us