சீனாவின் வடமேற்கு பாலைவனப் பகுதியில் மிகப்பெரிய ராணுவ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த கட்டுமானங்கள், சீனாவின் அணு ஏவுகணை திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, சீனா தனது நீண்ட தூர அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் ஏவுதளங்கள், பதுங்கு குழிகள், தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து வருகிறது.