அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ உட்பட நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 'வாந்தி கிருமி' என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு விசித்திரமான வயிற்று வைரஸ் தற்போதைய காலகட்டத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 1,194 பெரும் பரவல்கள் (Outbreaks) பதிவாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 'வாந்தி கிருமி' என்பது புதிய வகை நோய் அல்ல; இது மருத்துவ உலகில் 'நோரோவைரஸ்' என்று அழைக்கப்படும் மிகவும் பழக்கமான ஒரு தொற்று கிருமியாகும்.