AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம்.. மு.க ஸ்டாலினின் சரமாரி கேள்வி

இந்தக் கேள்விகளை பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களே எழுப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்ற இருந்த 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம். இது இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சினை. எனவே, த.வெ.க. அரசு இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்" என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம்.. மு.க ஸ்டாலினின் சரமாரி கேள்வி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jul 2026 15:50 PM IST

ஜூலை 29, 2026: 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால், 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைப்பதை எதிர்த்து வலுவான வாதங்களை முன்வைக்க முடியாமல் போயுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திமுக போராடி இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது:


இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது.

மேலும் படிக்க: “மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!”.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

ஆனால், இன்றோ மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டுக்கான இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை த.வெ.க. அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் மௌனமாக நின்றனர்.

மு.க ஸ்டாலினின் சரமாரி கேள்வி:

தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டப்பட்டது ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில்கூட ஏன் தாமதம் ஏற்பட்டது?

நியாயம் நம் பக்கம் இருந்தும், நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைக்காமல் ‘சரணடைந்ததன்’ பின்னணி என்ன? அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று தொடங்குவதற்கு முன்பே, மாநில கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்தது திட்டமிட்ட நடவடிக்கையா?

மேலும் படிக்க: “இனி லாக்கப் மரணங்கள் நடக்கவே கூடாது!”.. ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டும் அது ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

2026 மே 29-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவின் நிலை என்ன?

151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம்:

இந்தக் கேள்விகளை பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களே எழுப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்ற இருந்த 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம். இது இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சினை. எனவே, த.வெ.க. அரசு இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow Us