AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“காவேரி நீர் பிரச்சனைக்கு மேகதாது அணை திட்டமே ஒரே நிரந்தரத் தீர்வு!”.. கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அதிரடி!

Kaveri River Issue Mekedatu Project: காவேரி நீர் விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலனைக் காக்க மேகதாது அண திட்டமே இறுதித் தீர்வு என்றும், இது தொடர்பான திருத்தப்பட்ட திட்ட வரைவு மத்திய நீர் வள ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.

“காவேரி நீர் பிரச்சனைக்கு மேகதாது அணை திட்டமே ஒரே நிரந்தரத் தீர்வு!”.. கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அதிரடி!
டி.கே.சிவக்குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Aug 2026 08:30 AM IST

கர்நாடகா, ஆகஸ்ட் 03: காவேரி நதிநீர் பங்கீடு, கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்துவது குறித்துக் கர்நாடக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து அரசின் முடிவுகளை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!

உயர்மட்ட அனைத்துக்கட்சி கூட்டம்:

பெங்களூரில் அமைந்திருக்கும் அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அவசர அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா, பி.எஸ். எடியூரப்பா, எச்.டி. குமாரசாமி உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர். காவேரிப் பாசனப் பகுதிகளில் நிலவும் தற்போதைய மழைப்பொழிவு, அணைகளின் நீர்மட்டம் மற்றும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

விவசாயிகளின் நலனில் சமரசம் இல்லை:

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், “கர்நாடக மாநில மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், நமது மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் இந்த அரசு மிகவும் உறுதியோடு செயல்படுகிறது. எந்தவொரு சூழலிலும் நமது மாநிலத்தின் உரிமைகளையோ அல்லது விவசாயிகளின் நலனையோ விட்டுக்கொடுக்க மாட்டோம். காவேரி நதிநீர் விவகாரத்தில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களுக்கு மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றுவதே ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும்.” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : கர்நாடகா கபினி அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு!!

திட்ட வரைவு தாக்கல் செய்ய முடிவு:

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, அதனைப் ஒப்புதலுக்காக மத்திய நீர்வள ஆணையத்திற்கு மீண்டும் விரைந்து அனுப்பி வைக்கக் கர்நாடக அரசு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அதேவேளையில், காவேரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி உ உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆயத்தமாகி வரும் நிலையில், கர்நாடக அரசும் தனது தரப்பு நியாயங்களை உச்சநீதிமன்றத்தில் வலுவாக முன்வைத்துச் சட்டரீதியாக எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Follow Us