AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கம்.. இந்தியாவிற்கு பெற்று கொடுத்த இளவேனில் வாலறிவன்!

Elavenil Valarivan: துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே இளவேனில் வாலறிவன் சிறப்பாகச் செயல்பட்டு, நீண்ட நேரம் முதலிடத்தில் நீடித்தார். ஆனால், கடைசி 3 சுற்றுகளில் ஜப்பானின் ஹினாட்டா டாய்ச்சி அவரை முந்தினார். இதையடுத்து, ஹினாட்டா 253.0 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Asian Games 2026: ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கம்.. இந்தியாவிற்கு பெற்று கொடுத்த இளவேனில் வாலறிவன்!
இளவேனில் வாலறிவன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Sep 2026 15:57 PM IST

2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026) இந்தியாவின் இரண்டாவது பதக்கமும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கிடைத்தது. நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தங்க பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவேனில் 252.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதேநேரத்தில், வெறும் 0.6 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக இயங்காமல் போன வங்கதேசம்.. இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஹர்மன் படை!

முதலிடத்தில் தொடர்ந்தும் 2ம் இடம்:

துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே இளவேனில் வாலறிவன் சிறப்பாகச் செயல்பட்டு, நீண்ட நேரம் முதலிடத்தில் நீடித்தார். ஆனால், கடைசி 3 சுற்றுகளில் ஜப்பானின் ஹினாட்டா டாய்ச்சி அவரை முந்தினார். இதையடுத்து, ஹினாட்டா 253.0 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். தொடர்ந்து, இளவேனில் 252.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தென் கொரியாவின் ஹியோஜின் பான் 230.4 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். தொடக்கத்திலிருந்தே தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் இளவேனில் முன்னணியில் இருந்தார். ஆனால் இறுதிச் சுற்றுகளில் ஹினாட்டா நிலைமையை மாற்றியதால், இளவேனில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்ற வேண்டியதாகியது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இளவேனிலின் இரண்டாவது பதக்கம்.

2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இளவேனில் வாலறிவன் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர், இளவேனில் வாலறிவன் சக வீராங்கனைகளான சோனம் மாஸ்கர் மற்றும் விதர்ஷா கொச்சுலும்கல் ஆகியோருடன் இணைந்து பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இளவேனில் வாலறிவன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தியாவின் கணக்கிலும் இரண்டாவது பதக்கம்:

இலவேனிலின் வெள்ளிப் பதக்கம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக, இளவேனில் வாலறிவன், சோனம் மற்றும் விதர்சா ஆகிய மூவர் கொண்ட குழு, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. இதன் மூலம், இதுவரை இந்தியா வென்ற இரண்டு பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில்தான் கிடைத்துள்ளன. மேலும் இரண்டுமே வெள்ளிப் பதக்கங்கள் ஆகும்.

ALSO READ: ஆசியக் கோப்பை சண்டே ஸ்பெஷல்.. இந்திய அணியினரின் இன்றைய அட்டவணை!

ஏமாற்றிய சோனம் மாஸ்கர்:

இதே பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரண்டாவது இந்திய வீராங்கனையான சோனம் மாஸ்கர், ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். தகுதிச் சுற்றில் 634.1 புள்ளிகள் பெற்று அவர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார். இளவேனில் வாலறிவனின் வெள்ளிப் பதக்கத்தின் மூலம், ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தனது சிறப்பான செயல்பாட்டைத் தொடர்கிறது.

 

Follow Us