சென்னை எழும்பூர் – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து – பேருந்துகளில் அதிகரிக்கும் கூட்டம் – மாணவர்கள் அவதி
Train Cancellation Issue: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்கனவே 40 மின்சார புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு உடனடி தீர்வு காணவேண்டும் என கனிமொழி கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை, பிப்ரவரி 24 : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவைகள் 45 ரயில்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி கடந்த பிப்ரவரி 20, 2026 முதல் ஏப்ரல் 5, 2026 வரை இரு மார்க்கங்களிலும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக இந்த வழித்தடங்களில் தினமும் 208 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 150 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக 49 ரயில்கள் ரத்து
இந்த நிலையில் ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில் பிப்ரவரி 24, 2026 அன்று மேலும் 49 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனற். குறிப்பாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ரயில்கள் ரத்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.




இதையும் படிக்க : பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. வீடு புகுந்து காதலி, பாட்டி படுகொலை.. கோவையில் பயங்கரம்!!
எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11 நடைமேகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அதற்கு பதிலாக 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன. இதனால் ரயில்கள் இயக்கப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் தற்போது ரயில்களின் எண்ணிக்கை 115 ஆக குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு சென்னை எழும்பூர் – செயிண்ட் தாமஸ் மவுண்ட் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு இடையே ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ஏசி புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி தாம்பரம் வரை இயக்கப்பட்ட ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
கனிமொழியின் எக்ஸ் பதிவு
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 24, 2026
அதே சமயம் இந்த சிறப்பு மின்சார ரயில்கள் செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் இருந்து எழும்பூர் நோக்கி செல்லும்போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்ம்பாக்கம் ஆகிய நிறுத்தங்களை தவிர்க்கும். மேலும் எழும்பூர் முதல் கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்ப்டடு நோக்கி செல்லும் ரயில்கள் சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் மற்றும் நுக்கம்பாக்கம் நிலையங்களை தவிர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 5 நாட்களாக ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிவதோடு, பயணிகள் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்.. யாருக்கு என்ன பொறுப்பு? வெளியான அரசாணை..
மேலும் பேருந்து நிலையங்களிலும் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக குவிரந்து வருவதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பேருந்துகளில் இடம் பிடிக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில், நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.