Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய 2 இளைஞர்கள்… கீழே விழுந்து மரணம் – அதிர்ச்சி சம்பவம்

Railway Accident Update: சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த 2 இளைஞர்கள் தூங்கியதால், கீழே தவறி விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், படிக்கட்டில் அமர்ந்து பயணிக்க கூடாது என ரயில்வே காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய 2 இளைஞர்கள்… கீழே விழுந்து மரணம் – அதிர்ச்சி சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Dec 2025 19:00 PM IST

விழுப்பும், டிசம்பர் 27:  விழுப்புரம் (Viluppuram) அருகே ரயிலில் பயணம் செய்த இரண்டு தொழிலாளர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் அருகே, டிசம்பர் 26, 2025 அன்று மாலை சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (Train) சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் விழுப்புரம் நிலையத்தை கடந்த பின் விருதாச்சலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இரண்டு பேர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய 2 இளைஞர்கள் மரணம்

அவர்கள் இருவரும் கீழே விழுந்ததைக் கவனித்த பயணிகள் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில், விருத்தாசலம் ரயில்வே காவல் துணை ஆய்வாளர் சின்னப்பன் தலைமையிலான காவல்துறையினர், ரயில் பாதை பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடிய போதிலும், விழுந்த நபர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையும் படிக்க : மது அருந்தியதை தட்டிக் கேட்ட மனைவி…ஆத்திரமடைந்த கணவன்…விபரீதத்தில் முடிந்த தகராறு!

இந்நிலையில், டிசம்பர் 27, 2025  காலை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில், ரயில்வே பாதை அருகே இரண்டு உடல்கள் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், இரு உடல்களையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கோ கொத்தனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 29 வயதாகும் கந்தசாமி மற்றும் 32 வயதாகும் பாலாஜி என்பதும், இருவரும் சென்னையில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : பணம் பங்கு பிரிப்பதில் தகராறு…பாஜக நிர்வாகி வீடு சூறை. சொந்த கட்சியினர் உள்பட 5 பேர் கைது!

நேற்று அவர்கள், தங்களது சொந்த ஊரான கோத்தனூருக்கு செல்வதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த நிலையில் தூங்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் பிரிவு ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான முழுமையான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதையும், பயணிகள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் ரயில்வே காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.