பானிபூரி வாங்கி தருவதாக 5 வயது சிறுவன் கடத்தல்.. பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. கோவையில் பரபரப்பு!!
kidnapp in coimbatore; உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், உயிருடன் திரும்ப வேண்டும் என்றால் ரூ.1.80 லட்சம் பணம் தர வேண்டும்” என்று அவர்கள் இருவரும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கோவை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை, டிசம்பர் 27: கோவையில் பானிபூரி வாங்கி தருவதாக ஆசைகாட்டி 5 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சமயோஜிதமாக செயல்பட்ட போலீசார் கடத்தப்பட்ட சிறுவனை 3 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். அதோடு, கடத்தப்பட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர்கள் எதற்காக சிறுவனை கடத்தினார்கள், எங்கெல்லாம் அவனை அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்தும், போலீசார் இந்த கடத்தல் சம்பவத்தை எப்படி 3 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என்பது குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியிடம் காதல் நாடகம்.. 15 பவுன் நகைகள் அபேஸ்.. சக மாணவர்கள் 2 பேர் கைது!!
கோவையில் பணியாற்றிய அசாம் மாநிலத்தவர்கள்:
அசாம் மாநிலம் முரியாபரி பகுதியை சேர்ந்த அப்துல் ஹக் (29). அவரது மனைவி பர்பினா, மகன் ஹூமாயூன் (5). இவர்கள் கோவை அன்னூருக்கு அருகே உள்ள ஒரைக்கற்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். அதோடு, கணவனும், மனைவியும் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அதே தொழிற்சாலையில் அசாம் மாநிலம் குக்கரஜார் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பர்கள் 5 பேருடன் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.




சம்பளம் வழங்காததால் அதிருப்தி:
அசாம் மாநிலத்தில் இருந்து சொரிபுல் என்ற ஒப்பந்ததாரர் இவர்களை வேலைக்காக கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகம், இவர்களுக்கான சம்பளத்தை ஒப்பந்ததாரரிடம் வழங்கி வந்துள்ளது. ஆனால், சொரிபுல் அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மோசடி செய்து வந்துள்ளார். இதனால், அந்த சிறுவன் உட்பட அவனுடன், இணைந்து பணியாற்றிய 5 பேரும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
பானிபூரி வாங்கித் தருவதாக சிறுவன் கடத்தல்:
இந்தநிலையில், சொரிபுல், அப்துல் ஹக்குடன் நெருங்கிய நட்பில் இருப்பது அந்த 17 வயது சிறுவனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கோபத்தில் இருந்த அவர்கள், அப்துல் ஹக்கின் மகன் ஹூமாயூனை கடத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, பானிபூரி வாங்கித் தருவதாக கூறி சிறுவனை அழைத்து சென்று, பேருந்தில் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு கொண்டு சென்றுள்ளான்.
ரூ.1.80 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்:
அவருடன் அவரது நண்பர் அன்வோர் அலி (18) உடனிருந்தார். பின்னர், சிறுவனின் தந்தையிடம் அழைத்து, “உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், உயிருடன் திரும்ப வேண்டும் என்றால் ரூ.1.80 லட்சம் பணம் தர வேண்டும்” என்று அவர்கள் இருவரும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கோவை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: வகுப்பறைக்குள் புகுந்த ஆசிரியைக்கு அடி, உதை.. முன்னாள் மாணவர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!
3 மணி நேரத்தில் சிறுவன் மீட்பு:
இதையடுத்து, விசாரணையை தொடங்கிய போலீசார், கடத்தல்காரர்கள் மொபைல் சிக்னல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். அதன்படி, அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவர்கள் கடத்தல்காரர்கள் இருப்பிடத்திற்கு சென்றுனர். தொடர்ந்து, கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்துக்குள் சிறுவனை பாதுகாப்பாக மீட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.