AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை… மழைக்கு வாய்ப்பு என கணிப்பு..

Tamil Nadu Weather Update: பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கலாம். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை… மழைக்கு வாய்ப்பு என கணிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Feb 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 24, 2026: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து, மேலும் வலுவிழக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையில், தெற்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

அந்த வகையில், 24 பிப்ரவரி 2026, இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் படிக்க: தவெகவிற்கு ஆதரவளிக்கும் பன்ருட்டி ராமசந்திரனின் எம்.ஜி.ஆர் அதிமுக.. பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார் அறிவிப்பு..

மேலும், பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கலாம்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

உயரும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை; எனினும் சற்றே அதிகரிக்கலாம். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகாலை வேளையில் சில இடங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25°C ஆக இருக்கக்கூடும்.

மேலும் படிக்க: மதுபோதையில் காரை சரமாரியாக ஓட்டிய இளைஞர்.. கமுதி பேருந்து நிலையத்தில் பரபரப்பு..

100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37.8°C பதிவாகியுள்ளது. தொடர்ந்து, கரூரில் 37.5°C, மதுரையில் 36.2°C, வேலூரில் 35.6°C, திருப்பத்தூரில் 34.9°C மற்றும் தர்மபுரியில் 34.5°C பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடில் 100°F-ஐ கடந்த வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.2°C பதிவாகியுள்ளது.