கரூரில் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்.. இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்..
இடைநிலை ஆசிரியர் கலைமதி பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை, முறையாக பணியாற்றுவதில்லை, மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை என தலைமை ஆசிரியர் புவனா, வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
ஆகஸ்ட் 3, 2026: கரூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வகுப்பறையிலேயே மாணவர்கள் முன்னிலையில் தாக்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இடைநிலை ஆசிரியர் கலைமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் சின்னாடங்கோவில் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் புவனா தலைமை ஆசிரியராகவும், கலைமதி இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர்.
தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர்:
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் கலைமதி பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை, முறையாக பணியாற்றுவதில்லை, மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை என தலைமை ஆசிரியர் புவனா, வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை.. விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்..
இந்தச் சூழலில், தன் மீது புகார் அளித்த ஆத்திரத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, “என் மீது ஏன் புகார் அளித்தீர்கள்?” என்று கேட்டு, வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையிலேயே தலைமை ஆசிரியர் புவனாவை இடைநிலை ஆசிரியர் கலைமதி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இடைநிலை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து அதிரடி:
இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு ஆசிரியர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளியில் மாணவர்கள் தவெக.. தவெக.. என கோஷம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
இந்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் அவசர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தலைமை ஆசிரியரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட இடைநிலை ஆசிரியர் கலைமதியை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.