AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

திமுக கூட்டணியில் இருந்து இந்திய மயூனியன் முஸ்லீம் லீக் வெளியேறியது. இது தொடர்பாக சென்னை ராயபுரத்தில் ஜூன் 20, 2026 அன்று நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
மு.க.ஸ்டாலின் - காதர் மொய்தீன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Jun 2026 14:48 PM IST

சென்னை, ஜூன் 20 : திமுக கூட்டணியில் இருந்து இந்திய மயூனியன் முஸ்லீம் லீக் வெளியேறியது. இது தொடர்பாக சென்னை ராயபுரத்தில் ஜூன் 20, 2026 அன்று நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், விஜய் முதல்வராக வருவார் என ஐயூஎம்எல் உழைத்தது ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தது என்றார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

சென்னை ராயபுரத்தில் ஜூன் 20, 2026 இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டத்தில் இருந்து வெளியேறுவது என தீர்வானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு என இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொயிதீன் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கட்சி அதிகாரப்பூர்வமாக திமுக கட்டணியில் இருந்து விலகியுள்ளது.

இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்… மாணவர்கள் கல்வியை பாதிக்கும் செயலை ஏற்க முடியாது.. அண்ணாமலை கண்டனம்!

காதர் மொயிதீன் பேட்டி

 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் காதர் மொயிதீன், 60 ஆண்டு காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் ஐயஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார் என ஐயுஎம்எல் உழைத்தது. ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தது. தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியாதுஎன்றார். மேலும் பேசிய அவர், தவெக அரசின் நல்லாட்சி தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மக்களும் விரும்புகிறார்கள். தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் கட்சியை இணைத்ததற்கு விஜய்க்கு வாழ்த்து என்றார்.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜியின் சகோதரரை வலைவீசி தேடும் போலீஸ்.. சென்னைக்கே வந்த கரூர் போலீசார்.. அதிரடி சோதனை!!

மேலும் பேசிய அவர், இஸ்லாமிய மார்க்கத்தில் 5 கடமை உள்ளது. 6வது கடமை ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதாக கருத வேண்டும் என்று சொன்னேனே தவிர. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க சொல்லவில்லை. திமுகவிற்கு வாக்களிப்பது 6வது கடமை என நான் சொல்லவில்லை என்றார்.

Follow Us