தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி
இந்தியாவில் 3 மாநிலங்களில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற ஜூலை 30, 2026 அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை, ஜூலை 2 : இந்தியாவில் 3 மாநிலங்களில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற ஜூலை 30, 2026 அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக முதல்வர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி, அதிமுக எம்எல்ஏகள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பை, கரூர் உள்ளிட்ட தொகுதிகள் தேர்தல் ஆணையத்தால் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகததால் அதிர்ச்சி
ஆனால் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவில்லை. கடைசியாக குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!




சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை பெரும் பின்னடவை சந்தித்தன. யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக 108 இடங்களில் வென்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தன. இதில் முதல்வர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வென்றார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஏற்கெனவே மதுராந்தகம் தொகுதியை சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்எவ்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்,கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். குறிப்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2, 2026 இன்று ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.
இதனையடுத்து விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. பீகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஜூலை 12ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு – அண்ணாமலை அறிவிப்பு..
பீகார் மாநிலம் பாங்கிபூர் எம்எல்ஏவாக இருந்த நிதின் நவீன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். இதனையடுத்து பாங்கிபூர் தொகுதி காலியானது. மேலும் மத்தியப்பிரதேசம் மாநிலம் தடியா தொகுதி எம்எல்ஏ. ராஜேந்திர பாரதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த தொகுதி காலியானது. குஜராத் மாநிலம் மஞ்சல்பூர் தொகுதி எம்எல்ஏ யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் உடலநலக் குறைவால் காலமானார். இதனையடுத்து இந்த 3 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.