AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள்?.. நடந்தது என்ன? போலீசார் அளித்த விளக்கம்!!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கும்பகோணம் மேற்கு காவல் துறையினர், படுகாயமடைந்து கிடந்த சக காவலர் தேவேந்திரனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், கையின் நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள்?.. நடந்தது என்ன? போலீசார் அளித்த விளக்கம்!!
கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் அருண், காளி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 May 2026 09:51 AM IST

கும்பகோணத்தில் பிளக்ஸ் பேனர் வைக்கும் விவகாரத்தில் காவலரின் கை உடைக்கப்பட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பரவிய செய்திகளைத் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுத்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஒட்டி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான வதந்திகளும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும் பரவி வந்த நிலையில், காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து, உண்மை நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க: வேளச்சேரியில் பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!

பரவிய வதந்திகள் என்ன?

கும்பகோணம் நால்ரோடு பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் வார்டு நிர்வாகிகள் அருண், காளி ஆகியோர் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகப் பிளக்ஸ் பேனர்களை நள்ளிரவில் வைத்ததாகவும், அந்தச் சமயத்தில், அப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் கும்பகோணம் மேற்கு காவல் நிலையக் காவலர் தேவேந்திரன், அந்தப் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு அவர் அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தியதாகவும், அப்போது காவலர் தேவேந்திரன் மீது தவெகவினர் மிகக் கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தினார்கள் என்றும், வலது கை மணிக்கட்டு பகுதியில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

உண்மையில் நடந்தது என்ன?:

கடந்த 23.05.2026 சனிக்கிழமை இரவு, நாகப்பன் என்பவரின் மகன் அருண் மற்றும் சுகுமார் என்பவரின் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் தங்களது உள்ளூர் தெரு திருவிழாவிற்காகப் பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் சாலையில் சில பொருட்களை வைத்திருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், ரோந்துப் பணியில் இருந்த Delta Cop-6 காவலர்களான Gr.-II PC தேவநாதன் மற்றும் Gr.-I PC ராம்குமார் ஆகியோர், சாலையை மறித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தரும் முக்கிய விளக்கங்கள்:

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்று காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதோடு, காவலர் தேவநாதனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை:

“காவலர் தேவநாதன் கையை முறித்த தவெகவினர்” என்ற தலைப்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்பதால், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத இத்தகைய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனத் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Follow Us